பக்கம்:வ. வே. சு. ஐயர்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்.வி. கலைமணி

59


அவர்கள் இருவரும் லண்டனில் இருந்த போது, மதன்லால் திங்க்ரா என்ற ஒரு தேசபக்தன் அவர்களை ஒரு பார்க்கிலே சுட்டுக் கொன்றார். அதனால், திங்க்ராவைக் கைது செய்து சிறையிலே அடைத்தது பிரிட்டிஷ் அரசு அவன் மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டு, லண்டனிலே வழக்கும் நடைபெற்று வந்தது.

மதன் திங்க்ராவுக்கும்-சுடப்பட்ட வெள்ளையர்களுக்கும் தனிப்பட்டமுறையில் எந்தவிதமான விரோதமோ, முன் பகையோ இல்லை. இந்தியாவிலே அவர்கள் இருவரும் கர்சான் பிரபுக்கு துர் ஆலோசகர்களாக இருந்து கொண்டு இந்திய மக்களைக் கொடுமைப்படுத்தினார்கள். திங்க்ரா கர்சன் பிரபுவையே சுட்டுக் கொல்லத் திட்டமிடடார். கர்சான் திங்க்ராவிடம் சிக்காமல் மறைந்து கொண்டான். அதனால், அவனது கைக் கூலிகளாகச் செயல்பட்ட அந்த இரண்டு பேரும் கொலையாகிவிட்டார்கள். மொத்தத்தில் இந்தக் கொலை அரசியல் காரணங்களுக்காகச் செய்யப்பட்ட கொலையாகும்.

இக் கொலைகள் அரசியல் கொலைகள் என்று வெளியே சொன்னால் மற்ற நாடுகள் எல்லாம் சிரிக்குமே, அதுவும் லண்டனுக்கு வந்து இந்தியன் கொலை செய்துள்ளானே என்ற அவமானம் வந்து விடுமே என்று நினைத்த பிரிட்டிஷ் அரசு இந்தக் கொலைக்கு வேறு காரணத்தைக் கூறி, வழக்கையும் நீதிமன்றத்தில் நடத்தி வந்தது.

அந்த நேரத்தில் லண்டனில் சுரேந்திரநாத் பானர்ஜி, பவநகரி, பிபின் சந்திர பால்காபர்டே போன்ற இந்தியத் தலைவர்கள் இருந்தார்கள். அவர்கள் திங்க்ராவின் கொலை வெறியைப் பலமாகக் கண்டித்தார்கள். பலாத்காரத்தை அவர்கள் எதிர்ப்பதாகவும் அறிக்கை விட்டார்கள்.

கண்டனக் கூட்டம் நடத்தி, லண்டன் நகரிலே பகிரங்கமாகத் திங்க்ராவைக் கண்டித்து வாய்கு வந்தவாறு ஏசினார்கள். அக் கூட்டத்திற்கு ஆங்கிலேயர்கள், தங்களது குடும்பப் பெண்களுடன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வ._வே._சு._ஐயர்.pdf/61&oldid=1083476" இலிருந்து மீள்விக்கப்பட்டது