உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஹிராடெடஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

ஹிராடெடஸின்


5. தமிழர்களின் கடற்பயணம்

மிழ் நாட்டில் வாழ்ந்த பண்டைய தமிழர்கள், தமிழ் நாட்டிலே இருந்து கடல் மார்க்கமாக, மரக்கலங்கள் மூலமாக செங்கடல் வழியாகச் சென்றார்கள். பிறகு அங்கிருந்து கால் நடையாக நடந்து, சீதோன், தீரே ஆசிய துறைமுகங்களை அடைந்தார்கள். இவர்கள் வணிகப் பயணம் சென்ற ஆண்டு கி.மு. 3000 ஆகும். இயேசு பெருமான் பிறப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே ஆகும் என்பது குறிப்பிடத்தக்க சான்றாகும்.

மேற்கண்டவாறு போலவே, மற்றொரு வணிகப் பயணத்தையும் பழந்தமிழர்கள் மேற்கொண்டிருந்தார்கள். அதாவது, பாரிகா சாவிலே இருந்து கடற் பயணம் துவங்கிக் கடற்கரை ஓரமாகவே சென்று, செங்கடல் வழியாக, தீரே, சீதோன் துறைமுகங்கள் போய் சேர்ந்தார்கள். இந்தக் காலம், கி.மு. 2500 ஆம் ஆண்டளவினதாகும்.


6. உலகின் பல பகுதிகளில் தமிழர் குடியேற்றங்கள்!

பினீசியர்களின் கடற்பயணம்

தமிழ் நாட்டிலே இருந்து மரக்கலங்கள் வழியாகப் பினீசியா சென்று குடியேறிய பினீசியத் தமிழ்ப் பெருமக்களது பினீசியா நாடு, கி.மு. 356 முதல் 323 ஆம் ஆண்டின் போது, மகா அலெக்சாந்தர் என்ற மாமன்னனால் ரோமப் பேரரசுடன் சேர்க்கப்பட்டு, பிறகு ஆண்டுகள் ஆக ஆக, கி.மு. 48 ஆம் ஆண்டில் அந்தத் தமிழரது குடியேற்ற நாடு அழிந்தே போயிற்று. அத் தமிழர்களுடைய நாட்டின் பெயரும், அவர்கள் பேசிய மொழியும், சாம்ராச்சிய ஆதிக்கம் என்ற பூகம்பத்திலே புதைந்து போன விவரங்களை இதுவரை பார்த்தோம்.