நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்
33
அவ்வாறு அழிந்து போன பினீசியர் மக்கள் சிறுகச் சிறுக உலகின் பல பகுதிகளுக்குச் சென்று குடியேறிய விவரத்தை இனி மேற்கொண்டு காண்போம்.
1. பினீசியத் தமிழ்ப் பெருமக்கள், சீதோன், தீரே என்ற துறைமுகப் பட்டினங்களில் இருந்து இங்கிலாந்து நாட்டைச் சுற்றி, ஐஸ்லாந்து நாட்டை அடைந்து, பிறகு அங்கிருந்து வட அமெரிக்காவின் கிழக்குக் கரையிலுள்ள வடசேலம் எனும் துறைமுகத்திற்கு கி.மு. 800 ஆம் ஆண்டளவில் போய் சேர்ந்தார்கள். இது ஒரு கடல் மார்க்கமாகும்.
2. இரண்டாவது கடல் பாதையாக, அவர்கள் சீதோன், தீரே என்ற துறை முகங்களை விட்டுப் புறப்பட்டு, நேர்வழியாக வடசேலம் சென்று அடைந்த ஆண்டு கி.மு. 500 ஆகும்.
3. அதே சீதோன், தீரே துறைமுக நகர்களை விட்டுப் புறப்பட்ட வேறு பிரிவினர், நேர்வழியில் மெகானிஸ் பர்க் என்ற துறைமுகத்திற்கு கி.மு. 300 ஆம் ஆண்டிலே போய் சேர்ந்தார்கள்.
4. அதே சீதோன், தீரே துறைமுகப் பட்டினத்தை விட்டுப் புறப்பட்ட மற்றோர் பிரிவினர், கி.மு. 150 ஆம் ஆண்டில் தென் அமெரிக்காவிலே உள்ள அமேசான் என்ற நதியின் கழிமுகத்தை அடைந்தார்கள்.
5. அதே சீதோன், தீரே நகர்களை விட்டு அகன்ற இன்னொரு பிரிவினர், ஆப்பிரிக்கா கண்டப் பகுதியைச் சுற்றிக் கொண்டு, செங்கடல் வரை வந்து, பிறகு, அங்கிருந்து நேரே கி.மு. 1800 ஆம் ஆண்டில் மீண்டும் தமிழ் நாட்டிற்கே வந்து சேர்ந்தார்கள்.
இவ்வாறு பினீசிய தமிழ் மக்கள், ஐந்து பெரும் கடல் மார்க்கப் பாதைகள் வழியாக உலகின் பல பகுதியிலே குடியேறியதுடன், அவர்களுள் ஒரு பிரிவினர் மீண்டும் தமிழ் நாட்டிற்கே வந்தடைந்து விட்டார்கள்.