பக்கம்:ஹிராடெடஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

ஹிராடெடஸின்


சீன மொழியின் இலக்கணமான ஷென்மிங் என்ற ஒலியிலக்கணமும் சீன மொழிச் செய்யுள் உருவத்தோடுதான், இயற்றப்பட்டிருக்கிறது.

முற்காலத்தில் வழங்கி வந்த உலகமொழிகளுள், கிரேக்கமும் தமிழுமான இரண்டு மொழிகளில் உள்ள சொற்கள் ஒன்றுடன் ஒன்று கலந்திருக்கின்றன. இந்தக கலப்பு எப்படி ஏற்பட்டது?

கிரேக்க நாடும், தமிழ் நாடும் வியாபாரத்தில் சிறப்புற்று விளங்கியபோது ஏற்பட்ட வணிகப் பரிமாற்றத்தால் மொழிக் கலப்பு ஏற்பட்டிருக்கின்றது என்பது மொழி ஆய்வாளர்களது முடிவாகும்.

கிரேக்க மொழியில் பரவிக் கிடக்கும் தமிழ்ச் சொற்களிலே சிலவற்றை எடுத்துக் காட்டுக்காகக் கீழே தந்துள்ளோம்; ஓசைகளை உற்று நோக்கிப் பொருள்களையும் பாருங்கள்:

கிரேக்கம் : தமிழ்
ஆரம் (பொன்) : ஆரம்
ப்ளுமி : பீலி அல்லது மயில்தோகை
ஹோரா : சோதிடத்தில் வரும் ஒரை என்ற சொல்
ஆக்சிஸ் (Axis) : அச்சு
அடிடே (Aditate) : அடு (சேர்)
எமிஸ் (Emis) : ஆமை
அனிமா (Anima) : ஆன்மா
செஞ்சிம் (Sensim) : இஞ்சி
ஏனம் (Aena) : ஏனம் (பாத்திரம்)
யுனி (Uni) : ஒன்று, ஒன்னு
கடோ (Cado) : கட, (அகழ்)
குரோகோடைல் (Crocodile) : கரா (முதலை)
கெனா (Kena) : கனவு