பக்கம்:1806 (ந. சஞ்சீவி).pdf/27

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வேலூர்ப் புரட்சி

25பீரங்கிப் பட்டாளம் பேய்களின் கூட்டமென உள்ளே சாடியது. அந்தோ! வேலூர்க்கோட்டை இரணக்களமாயிற்று. வெள்ளைப்பட்டாளம் வெறியாட்டம் - பேயாட்டம்-ஆடியது. கர்னல் கில்லெஸ்பி ஏகாதிபத்திய வெறியர்களுக்குத் தலைமை தாங்கினான்; எட்டுக் திசைகளிலும் பாய்ந்தான்; சுட்டான் ; சூறையாடினான் ; கொன்றான்; கொளுத்தினான். இச்சந்தர்ப்பத்தில் நடைபெற்ற கொடுமைகளைப் பற்றி வெள்ளையரின் நூல்களே வாய் விட்டுப் புலம்புகின்றன. புரட்சி வீரன் ஒருவனை அங்குலம் அங்குலமாகச் சிதைத்தனர். கோட்டையைக் கைப்பற்றியதும் அரண்மனையில் சரண் புகுந்திருந்த நூற்றுவருக்கு மேற்பட்ட இந்தியச் சிப்பாய்கள் வெளியே இழுத்து வரப்பெற்று, பெருஞ்சுவர் ஒன்றின் ஓரமாக நிறுத்திவைக்கப்பட்டு ஒருவனும் பிழைக்கமுடியாத வகையில் சுட்டுத் தள்ளப்பட்டார்கள். கர்னல் கில்லெஸ்பியும் அவன் கூட்டாளிகளும் நம் வீரர்கட்கு இன்னும் எண்ணற்ற கொடுமைகளைப் புரிந்திருப்பார்கள். என்றாலும், எதிர் பாராத வகையில் வேலூர்க் கோட்டையிலே கிளம்பிய எரிமலைப் புரட்சியை நினைந்து நினைந்து நெஞ்சம் திடுக்குற்றுக் கையும் கருத்தும் சோர்ந்தார்கள்.

எண்ணூற்றுவர் படுகொலை : எட்டு மணி நேரம் விடுதலை வீரர்களின் பாசறையாய் விளங்கிய எழிலும் ஏற்றமும் நிறைந்த வேலூர்க்கோட்டை அரைமணிநேரத்தில் ஆங்கிலேயர் கையிற் சிக்கியது. கொள்கைக் வீரர்க்கட்கும் கொள்ளைக்