உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ENGLISH AND TAMIL.

149

It is better for a man, not to leave anything to his wife, if she is of tender age,
ஒரு மனுஷனானவன் தன் பெண்சாதி இளந்தையாயிருந்தால் அவளுக்கு ஒண்ணும் வைக்காமலிருக்கிறதே யுத்தமம்.
What you say is right my good friend?
என் பிறியமுள்ள சினேகிதனே நீர் சொல்கிறது நியாயந்தான்.
But who will look after the burial?
ஆனால் சபத்தை அடக்கம் பண்ணுகிறதற்கு ஆர் பராமரிப்பார்கள்?
My Brother,
என் சகோதரன்.
Who shall hold the pall?
சாவு பெட்டியின் மேல் மூடப்பட்ட துக்க சீலை முனைகளை ஆர் பிடிப்பார்கள்?
Those who are nearly related to us,
எங்களுக்கு சேர்ந்த உறவா யிருக்கப்பட்டவர்கள் தான்.
Where will he be buried?
அவரெங்கே அடக்கம் பண்ணப்படுவார்?
Where will they bury him?
அவரையெங்கே புதைப்பார்கள்?
At St. Thome Church in Millapoor,
மயிலாப்பூரிலிருக்கும் பரிசுத்த தோமையார் கோவிலிலே.
Will there be a Funeral Sermon?
அங்கே அடக்கத்தின் பிறசங்க முண்டாயிருக்குமா?
Yes, Sir,
ஆம் ஐயா.
What time will the burial take place?
என்னேரத்திற்கு அடக்கம் பண்ணப்படும்?
About Five o'clock this evening,
சாயந்திரம் அஞ்சு மணிக்கு.
The Funeral goes by
சாவு போகுது சவம் போகுது.
It appears very grand,
பார்வைக்கு வெகு மேன்மையாய்க் காணுது.
The undertaker will make his fortune by this burial,
இந்த அடக்கத்திலே சாவு பெட்டி பண்ணுகிற இழவு காரியத்தை நடபிக்கிறவன் ஆஸ்திபந்தனாவான்.
He has already become a man of very great estate, by burying numerous persons
வாந்தி பேதியென்று விளம்புகிற வியாதியினாலே மரணமடைந்து போன அனேகம் பேர்களை அடக்கம் பண்ணுகிறதின் மூலமாய்