பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

(௰)

தொல்காப்பியம்


யு முந்து நூலையுமாராய்ந்து முறைப்படவெண்ணினாரெனப் பொருடருதலானு மதுபொருளன்மை யுணர்க. இன்னு ‘முந்து நூல்கண்டு முறைப்பட வெண்ணி’ யென்றதனானே, முதல்வன் வழி நூல் செய்யுமாற்றிற் கிலக்கணங் கூறிற்றிலனேனு மந்நூல் செய்த முறைமை தானே பின்பு வழிநூல் செய்வார்க்கிலக்கணமா மென்பது கருதி யிவ்வாசிரியர் செய்யுளியலிலும் மரபியலிலு மந்நூல் செய்யு மிலக்கணமு மதற்குரையுங் காண்டிகையுங் கூறுமிலக்கணமுங் கூறியவதனையே யீண்டுங் கூறினாரென் றுணர்க. அவை யவ்வோத்துக்களா னுணர்க. *


யாற்ற தொழுக்கே தேரைப் பாய்வே,
சீய நோக்கே பருந்தின் வீழ்வென்,
றாவகை நான்கே கிடக்கை முறையே


பொழிப்பே யகல நுட்ப மெச்சமெனப்
பழிப்பில் சூத்திரம் பன்ன னான்கே.


அவற்றுள்,
பாடங் கண்ணழி வுதாரண மென்றிவை,
நாடிற் றிரிபில வாகுதல் பொழிப்பே


தன்னூன் மருங்கினும் பிறநூன் மருங்கினும்,
துன்னிய கடாவின் புறந்தோன்று விகற்பம்
பன்னிய வகல மென்மனார் புலவர்.


ஏது வினாங்கவை துடைத்த னுட்பம்,


துடைத்துக்கொள் பொருளை யெச்ச மென்ப


அப்புல மரிறப வறிந்து முதனூற்
பக்கம் போற்றும் பயன்றெரிந் துலகந்
திட்ப முடைய தெளிவர வுடையோ
னப்புலம் படைத்தற் கமையு மென்ப.



சூத்திர முரையென் றாயிரு திறத்தினும்
பாற்படத் தோற்றல் படைத்த லென்ப
நூற்பய னுணர்ந்த நுண்ணி யோரே.

- இவற்றை விரித்துரைத்துக் கொள்க.


(சிறப்புப்பாயிரமுற்றிற்று.)