பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிவமயம்

கணபதி துணை.

தொல்காப்பியம்,

சிறப்புப்பாயிரம்.


 

டவேங்கடந் தென்குமரி,
யாயிடைத்,
தமிழ் கூறு நல்லுலகத்து,
வழக்குஞ் செய்யளு மாயிரு முதலி
னெழுத்துஞ் சொல்லும் பொருளு நாடிச்,
செந்தமி ழியற்கை சிவணிய நிலத்தொடு
முந்து நூல்கண்டு முறைப்பட வெண்ணிப்,
புலந் தொகுத்தோனே போக்கறு பனுவ ,
னிலந்தரு திருவிற் பாண்டிய னவையத்,
தறங்கரை நாவி னான்மறை முற்றிய
வதங்கோட் டாசாற் கரிறபத் தெரிந்து,
மயங்கா மரபி னெழுத்துமுறை காட்டி ,
மல்குநீர் வரைப்பி னைந்திர நிறைந்த,
தொல்காப் பியனெனத் தன்பெயர் தோற்றிப்,
பல்புகழ் நிறுத்த படிமை யோனே”
-

(என்பது - பாயிரம்)

எந்நூலுரைப்பினு மந்நூற்குப் பாயிரமுரைத் துரைக்க வென்பதிலக்கணம், ' என்னை!

“ஆயிர முகத்தா னகன்ற தாயினும்
பாயிர மில்லது பனுவ லன்றே”

என்றலின்.

பாயிரமென்றது புறவுரையை. நூல்கேட்கின்றான் புறவுரை கேட்கிற் கொழுச் சென்றவழித் துன்னூசியினிது செல்லுமாறு போல வந்நூலினிது விளங்குதலிற் புறவுரை கேட்டல் வேண்டும். என்னை! பருப்பொருட்டாகிய பாயிரங் கேட்டார்க்கு நுண்பொருட்டாகிய நூலினிது விளங்கும், என்றலின்.

அப்பாயிரந்தான் - தலையமைந்த யானைக்கு வினையமைந்த பாகன் போலவும், அளப்பரிய வாகாயத்திற்கு விளக்கமாகிய திங்களு ஞாயிறும் போலவு மந்நூற் கின்றியமையாச் சிறப்பிற்றாயிருத்தலினது கேளாக்காற் குன்று முட்டிய குரீஇப் போலவுங் குறிச்சிபுக்கமான் போலவு மாணாக்கனிடர்ப்படு மென்றுணர்க. அப்பாயிரம் - பொதுவுஞ் சிறப்பு மென விருவகைத்து, அவற்றுட் பொதுப் பாயிரமெல்லா நூன்முகத்துமுரைக்கப் படும். அது நானான்கு வகைத்து.