66
' விடாதீர்! சுதேசியம்
“ விரைவினில் திரும்புவேன் ; விடாதீர் சுதேசியம் ;
தரை மிசை எதுவும் தருவ ததுவே"
என்றுநான் மொழிந்தேன். எல்லாரும் ஒன்றா
“நன் "றென மொழிந்தனர். நானவர் நீங்கி
ரயிலடிப் போலிஸ் டேஷனை நண்ணினேன்.
மெயிலினைப் போலிஸார் விரும்பிஎதிர் பார்த்தனர்.
அங்கும் கூட்டம் அளவற நின்றது.
எங்கும் போலிஸார் இடைவிடா துலவினர்.
ரயில்வண்டி வரவும் நானதில் ஏறி
அயலில்நின் றாரிடம் அனுப்பிவழி இருந்தேன்.
என்னொடு வெள்ளை இன்ஸ்பெக்டர் ஒருவனும்
முன்னர்நான் கண்ட மூன்றுகான்ஸ் டபிளும்
இருந்தனர். என்பின் எட்டிய வண்டியில்
பெருந்திரளாகப் பெருவுடை மாற்றி
எண்ணிலாப் போலிஸார் இயம்பி இன்பொடு
கண்ணெலாம் என்பின் காட்டி யிருந்தனர்.
புறப்படவும் வண்டி போந்தவன் ஒருவன்
திறப்பட நின்றெற்குச் சில்லரை நல்கினன்.
கங்கைகொண் டானைக் கண்டதும் அங்குளர்
தங்கை குவித்தனர். என்கை குவித்தேன்
மணியாச்சி வந்ததும் வந்தென் நண்பர்
பணியா தென்றனர். “ பாரும் நம் சுதேசியக்
கப்பல் என்றும் கதியொடு நடந்திடச்
செப்புவ திஃதே செல்கிறேன் " என்றேன்.
வருந்தினர் மிகவும். “ வருந்துதல் விட்டுத்
திருந்திய செயல்களே செய்கஎந் நாளும் "
109
109