பக்கம்:1911 AD paper copy-சுய சரிதை, வ. உ. சிதம்பரம் பிள்ளை, 1946 print copy.pdf/12

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
 

வாய்மை என்பதே வாக்கினிற் கொண்டோன்;
தூய்மை என்பதே தொடர்ந்த சிந்தையோன்;
ஒழுக்கம் பலவும் உடையாப் புனைந்தோன்;
இழுக்கம் ஒன்றே என்றும் இல்லோன்;
சாந்தம் பொறுமை தகுதியென் றிவற்றின்
வேந்தன் என்ன விளம்பத் தக்கோன்;
விருந்தினர்க் கென்றும் விரும்பி அளிப்போன்;
திருந்திய சொல்லும் செயலும் உடையோன்;
செந்தமிழ் நூலெலாம் சிறக்கக் கற்றவை
தந்தமிழ் தெனக்கொளச் சாற்றும் திறலோன்;
கருட தரிசனம் கண்டா லல்லது
பருகான் நீரும் பத்துநாள் என்னினும்,
வெண்ணீறும் [1].*மணியும் மேவப் பெற்ற
தண்ணிய அழகிய சரீரம் கொண்டோன்;
வயதோ நாற்பது வளரப் பெற்றோன்;
பெயரோ வீரப் பெருமாள் அண்ணாவி,
அன்னோன் சிறந்த அடியிணை சார்ந்து
பன்னாட் கேட்கும் பாக்கியம் பெற்றிலேன்.
அறிவரிச் சுவடி, ஆத்தி சூடி

  • செறிவுறக் கேட்டுச் சிந்தையுட் கொண்டேன் ;

எண்ணின் சுவடி, எழுதும் சட்டம்
கண்ணுறக் கொண்டு கருத்தொடு பழகினேன்
உலக நீதி ஒழுக்க இயல்பு
பலமுறை கேட்டுப் பண்பொடு பயின்றேன்
கொன்றை வேந்தன், [2]†குழியின் பெருக்கம்,
[3] வென்றி வேற்கை. [4] வெண்பா மூதுரை


  1. மணி - உருத்திராக்கமணி
  2. † குழியின் பெருக்கம் - குழிப்பெருக்கம் எனும் கணித நூல்
  3. வென்றிவேற்கை - வெற்றிவேற்கை.
  4. + வெண்பா - நளவெண்பா.

7