இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
சிறையில் செக்கிழுத்த வைபவம்!
என்றுசில சொல்லி ஏகினர் அவர்தாம்.
சொல்லிய வண்ணமே செய்தனர் அவரும்.
அவருரைப் படியே அருந்தினேன் யானும்.
இரவில் வந்தவர் இன்புறப் பேசுவர்;
பண்டம் வழங்குவர்; பாரதம் பாடுவர்
திங்கட் கிழமை ஜெயிலர் என் கைத்தோல்
உரிந்ததைப் பார்த்தான். உடன் அவன் எண்ணெய்
ஆட்டும் செக்கினை மாட்டிற்குப் பதிலாப்
பகலெலாம் வெயிலில் நடந்து தள்ளிட
அனுப்பினன், அவனுடை அன்புதான் என்னே!
116
116