பக்கம்:1911 AD paper copy-சுய சரிதை, வ. உ. சிதம்பரம் பிள்ளை, 1946 print copy.pdf/125

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஜெயிலர் குத்தப்பட்டது.

டவர்எனும் ஆபீஸ்க் கொருநாட் காலையில்
சென்றேன். அங்கெனை ஸினியர் கான்விக்டு
வார்டர்முன் சொல்லிய வந்து பாமன்
சிரமேல் இரண்டு கரங்களைக் கூப்பி
வணங்கினாள், கேற்றில் வந்த ஜெயிலர்
அச்செயல் கண்டு மிக்கக் கனன்று
டவர்வந் ததுவும் சாற்றிய பாபன்பால்
"எவரை நீ இவண் இறைஞ்சினை? என்றான்.
“எவரையும் யான் இவண் இறைஞ்சிலேன்” என்று
தவறிலா சாமன் சாற்றினன். ஜெயிலர்
என்னை அழைத்தான். மன்னினேன் யானும்.
இவன் தான் நின்னை இறைஞ்சி னானா?"
என்றெனை வினவினன். “எல்லாரும் என்னை
என்றும் இறைஞ்சு கின்றனர். யானோ
இவன் இறைஞ் சினதைக் கவனித்த தில்லை
என்று மொழிந்தேன். நின்ற அச் செயலர்
“ சென்றிடு நின்னறை என்று கூறினான்.
“ நன்"றெனச் சொல்லிச் சென்றேன் என்னறை.
பின்னர் ஜெயிலர் மன்னிய ராமன்
முன்னர் அனேகர்வான் மன்னிடச் செய்தவன்
என்பதை மறந்தும், வன்பொறை இழந்தும்,
"அவனை எக் கைதியும் மதியா வண்ணம்
தவறுளன் என்று தனி அறை வைத்துளேன்
அவனை நீ இங்ஙனம் அடுத்துநின் றிறைஞ்சின்
டவர் ஆபீசு - சிறைக்கார்யாலயம்.
120