பக்கம்:1911 AD paper copy-சுய சரிதை, வ. உ. சிதம்பரம் பிள்ளை, 1946 print copy.pdf/124

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

         தமிழ்த் தொண்டு.


தீய ஜெயிலர் செய்ததைத் திங்கட்
பார்வையில் டாக்டர்பால் பகர்ந்தேன். அவன்என்
அரங்கினைப் பூட்டல் ஆகா தென்றும் என்
உரந்தனைக் காத்தற் கொவ்வொரு காலையும்
மாலையும் ஒவ்வொரு மணிநடந் துலாவும்
வேலையைச் செய்திட வெளிவிடல் வேண்டும்
என்றுமோர் உத்தர வீந்தான்.ஜெயிலர்
பொன்றி யதுபொல் குன்றி அடங்கினான்.
தினம்போ துதித்து மேல் திசைசெலும் வரையில்
" மனம் போல வாழ்வு வரைந்து முடித்தேன்
என்மனை வியும் அவட் கிளையவன் பிச்சனும்
என்னிரு மகாருடன் என்சிறை வந்தே
ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு மணி தான்
'செவ்விதில் என்னை டிப்டி ஜெயிலர்
ஆபீஸ் அரங்கினில் அன்பொடு கண்டு
பேசிஇன் புற்றனர் பேசிய பொழுதென்
மக்களை எடுத்துயான் முத்தி முகர்ந்தும்,
மடியினில் வைத்தவர் மழலைச்சொற் கேட்டும்,
பிச்சன் கொடுத்த பிஸ்கந் கொடுத்தவர்
உண்டிடக் கண்டும் உவந்திருந் தேனே


" மனம்போல வாழ்வு- ஆங்கில அறிஞர் ஜேம்ஸ் ஆலன் எழு
திய " As a man thinketh' என்ற நூலின் மொழி
பெயர்ப்பு,
119

 

119