பக்கம்:1911 AD paper copy-சுய சரிதை, வ. உ. சிதம்பரம் பிள்ளை, 1946 print copy.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

கற்றவை: கண்டு களித்தவை.

ஒட்டப் பிடாரம் உற்றமுற் றினங்களிற்
பாட்டனொடு சென்று பாத வாசகம்
குணிநல் அல்லிக் குளத்துச் சுப்பிர
மணிய பிள்ளை வாசிக்கக் கேட்டும்,
வீட்டினில் ஒவ்வொரு விடியற் காலையும்
பாட்டி மீனாள் பகர்ந்தகஞ் சோக்கரின்
திருவிளை யாடல் திருக்கதை யனேகம்.
ஒருவிளை யாடலா வுவந்துட் கொண்டும்,
பாட்டன் இரவினிற் படுக்கையிற் சொல்லிய
தேட்ட, மிகுந்திடுஞ் சீருடை [1]இராகவன்
கதையினைக் கேட்டும், கணபதி யாலயம்
நிதமும் அவனொடு நியமமாச் சென்றும்,
[2]கட்டாரி முதலிய கடைத்தெரு வமர்ந்த
எட்டாப் பரத்தினை எய்திய துறவிகள்
இயம்பிய உரையும் இன்னிசைப் பாடலும்
நயம்படக் கேட்டும், நற்றொண்டு புரிந்தும்,
நல்லார் தம்மொடு நாளும் வீட்டினிற்
பல்லாங் குழியிற் பாண்டிபல வாடியும்,
சிறுவர் தம்மொடு சிறு வீடு கட்டி
அறுசுவை யுண்டி யருந்தியும் திரிந்தேன்.

 

  1. இராகவன் கதை-ராமாயணம்.
  2. கட்டாரி - கட்டாரிச் சாமியார் என்பவர்,

18