பக்கம்:1911 AD paper copy-சுய சரிதை, வ. உ. சிதம்பரம் பிள்ளை, 1946 print copy.pdf/52

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
 

" நாவாய்ச் சங்கம் நன்றாய் நடக்குமா?'


"அருமாண் தொழிலிதென் றறிந்தோம் இந்நாள், எம்மால் ஆகா தித்தொழில் "என்றே, அம்மா! அந்நாள் அவரைத் திருத்தயான் அடைந்த துயரினை அறைய வொண்ணாது. திடந்தனை விடாது தினமும் அவரிடம் அன்புற மொழிந்தும், அச்சமுறப் பேசியும், பின்புறம் ஏசியும், பெருமதி சொல்லியும் பலபல பகலும் பலபல இரவும் ஜலபான மின்றிச் சரிப்படச் செய்து பத்திரம் எழுதினேன்; பார்த்ததைச் சிலநாள் சித்திரப் படுத்தித் திருத்திப் பின்னர் இருதிறத் தாரும் இட்டனர் ஒப்பம், ஒருதர ஏஜண்டுவப்பொடு சென்றனன் பின்னரும் நல்ல பெருமாள் பம்பாய்க் கென்னவோ சிலவுரை இயம்பினன் தந்தியில். அதனைக் கேட்டதும் அவ்விடத் துள்ளான் எதனையும் முடிக்க இயலா தென்றான். முன்போல் தந்தியில் மொழிந்தவன் உளத்தை என்பே ருழைப்பால் இழுத்தேன். பின்னவன் பிரகு மாலொடு பெரிய சூரான் தரமுயர் கப்பல் சாரும் கொழும்பு சென்றவண் கப்பலைச் சீருறக் கொண்டு நன்றுற நடாத்துக நாளும்." என்றான். ஐந்தாம் நாளில் அழகுசால் கொழும்பில்


கப்பலில் உள்ள முக்கிய வேலையாட்கள் இருவர்; கிறிஸ்தவர். 47 </poem>}}

 

47