பக்கம்:1911 AD paper copy-சுய சரிதை, வ. உ. சிதம்பரம் பிள்ளை, 1946 print copy.pdf/54

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

கப்பல் கம்பெனிகளுக்குள் போட்டி.


தூற்றுக் குடியினைத் தொடும்பல சரக்கும்
ஏற்றினர் இறக்கினர் என்றும் இலாபம்
தருபவர் யாவரும் சார்ந்தெம் கப்பலை ;
வருபவர் செல்பவர் மனங்கொண் டேறினர்.
[1]பீயைஸன் கம்பெனி பெரிய ரஜண்டு
தாயிலாச் சேய்போல் தவித்தனன் ; அன்றவன்
குறைத்தனன் கப்பலின் கூலிகள் யாவையும்;
இறைத்தனன் நிதியினை எதிர்ந்தவர் எவர்க்கும்
எந்த விதத்தினும் இளைத்ததும் என்முன்
சொந்த நிதியினைத் தோற்றதும் கண்டனன்.
இரண்டொரு தினங்களில் இருபதி னாயிரம்
திரண்டது லாபம் செப்பிய “ஷா"வுக்கு.
அப்படி யிருந்தும் அன்னியர் வலையில்
தப்பி விழுந்து தாழ்வுறு மதியால்
திடீரெனக் கொழும்பு சென்ற கப்பலை
விடியுமுன் அனுப்பினன் வேறொரு துறைமுகம்.
எல்லா வணிகரும் ஏற்றுதல் இறக்குதல்
இல்லா துழந்தனர் ; ஏக்கம் உற்றனர்.
அணுகிய தந்நாள் “ஆஷியாட்டிக் கப்பல்"
நணுகிய சரக்கெலாம் நயமுற ஏற்றினர்
பாக்கிய மிகுந்த [2]பக்கிரி முகம்மதை

 

  1. B. I. S. N. Company-வெள்ளைக் கப்பல் கம்பெனி.
  2. பக்கிரி முகம்மது கப்பல் கம்பெனிக்கு துணிவுடன் முதலில்
    பொருள் தந்த பிரபல முஸ்லிம் வியாபாரி பக்கீர் முகம்மது
    ராவுத்தர்.

49

4