பக்கம்:1911 AD paper copy-சுய சரிதை, வ. உ. சிதம்பரம் பிள்ளை, 1946 print copy.pdf/60

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

சர்க்கார் செய்த
சாற்றொணாக் கொடுமைகள்.

கப்பல் மலரினைக் கண்டது மாள்வோர்
அப்பப்பா ! இவனமக் கடும்பகை யென்று
மனத்தினுட் கொண்டனர் : வரைந்துமேல்
[அனுப்பினர் :}}
தினத்தொடும் என்செயல் தேடித் திரிந்தனர்.
தூற்றுக் குடியார் ஏற்றிடு மாறு
பலவிடம் பகர்ந்த பிரசங்கம் பலவும்,
திருநெல் வேலியிற் சேர்ந்த* மா காணப்
பெருமொரு கூட்டத்துப் பேசிய ஒன்றும்,
பாளையங் கோட்டையிற் பகர்ந்த சிலவும்,
+காளை அப் பர்முன் கழறிய சிலவும்,
மதுரையிற் கவியருள் வாணரைக் கூட்டி
நிதமொரு தலமா நிகழ்த்திய பலவும்,
பம்பாய் சென்றதும், பலநாள் நின்றதும்,
வெம்புதல் போன்று மிகுநோய் கொண்டு
வருந்திய என்முதல் மகனைப் பார்க்கத்
திருந்திய என்னுளம் திரும்பா ததுவும்,
கங்கை குளித்ததும், காசியில் நின்றதும்,
வங்கம் சென்றதும், வாலிபர்க் கண்டதும்,
மதுராஸ் பீச்சு, மார்க்கட் டிடங்களில்
சதுர மாகச் சாற்றிய பலவும்,
கூட லூரில் கூறியவும், ஆங்குக்



  • மாகாணப் பெருமொரு கூட்டம்-மாகாண மகாநாடு,

+ காளையப்பர் ரிஷப வாகனத்தையுடைய ஸ்ரீ நெல்லையப்பர்.

 

55