பக்கம்:1911 AD paper copy-சுய சரிதை, வ. உ. சிதம்பரம் பிள்ளை, 1946 print copy.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

தூற்றுக்குடியில் சுதந்திர முழக்கம்


பிரேக்கன் எனும் ஈப் கலைக். ரிடத்தே.
இரக்கம் உற்றவன் எழுதினன் மேலே.
வந்த பதில்படி மறுபிர சங்கம்
சந்தித் தெருவிலும் ஐனங்கள் கூடும்
பொதுவிடங் களிலும் புகறலா காது
சிதம்பரம் பிள்ளையும், சிவழம் என் றனன்.
அந்த எழுத்தினை அழித்திட மறு தினம்
“ சந்தித் தெருவும் ஜனங்கள் கூடும்
பொதுவிட முந்தினம் புகன்ற விடமும்
எதுவோ அதனில் என்றும் போலப்
1 பத்ம நாபன் பகர்வன் பிரசங்கம் ;
சித்தம் பாமும் சிவமும் பின்னர்த்
தரும சங்க நெசவுச் சாலையில்
பெருமைச் சுதேசியம் பேசுவர் என்றும்,
அவ்விடத் தாள் வோர் அணுகல் என்றும்
செவ்விதில் விளம்பரம் தெருவெலாம் பரப்பினன்
உரைத்த கழக சுந்தா உத்தமன்.
குரைத்தனர். ஆட்சி குறைந்த தென்றனர்.
தந்தியிற் பற்பல சாற்றினர் விஞ்சுக்கு
வந்தனன் விஞ்சு மறுநாள் மாலையில்
பிரேக்க னோடு நான் பேசி நிற்கையில்,
பத்மார்பன்-செல்லை ஜாமீன் வழக்கு எதிரிகளில் ஒருவரான பத்
மாாப ஐயங்கார்.
3 சண்முகசுந்தாம் பாலி, சு. ஷண்முகசுந்தரம் பிள்ளை,
1 விஞ்சு-செல்லை ஜில்லா கலெக்டர் விஞ்சுதுரை.
80

 

60