பக்கம்:1911 AD paper copy-சுய சரிதை, வ. உ. சிதம்பரம் பிள்ளை, 1946 print copy.pdf/76

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
 

மூவர்மீது ஜாமீன் வழக்கு.




பாலர்கொண் டாட்டப் பண்பெலாம் தடுத்துமியாம்
இராஜ நிந்தனை இயம்பலால் ஜாமீன்
தராததற் கேது சாற்றிட மறுதினம்
காலையில் விஞ்சுவைக் காணும் படிக்கும்
மாலையில் எமக்கு வந்தன ஆர்டர்கள்.
அறிக்கைப் படியே அனேகர் பேட்டையில்
செறிக்கவந் திருந்தனர். செப்பினன் சிவஞ்சில.
கேட்டதும் நம்மவர் கிளம்பினர்: ஆர்த்தனர்:
ஓட்டம் பிடித்திட வுன்னி எழுந்தனர்
பெரியான்ஸ் பெக்டரும் பேசிய எழுதிய
அரிய [1]கிராம முன்சீபு நண்பனும்.

  • பார்த்தேன்: ஆபத்துப் பலத்ததென் றுன்னினேன்.

வார்த்தேன்: சிலசொல் மனவலி கொண்டே.
“உயிரினும் இனியவென் உத்தம நண்பரே!
செயிரெமக் குற்றதாச் செப்பினன் சிவம்தான்
நாளைச் சென்றியாம் நன்மையைப் பெற்று
நாளைக் கழித்திவண் நண்ணுவோம்; பின்னர்
இயம்பிய வேலகள் யாவையும் செய்வோம்
நயம்பட வென்றே நவின்றனன்” என்றேன்.
அம்மொழி கேட்டதும் அடங்கினர்; இருந்தனர்;
விம்மி அழுதனர்: வெஞ்செயல் என்றனர்.
விரைவினில் ஆர்டரை விளக்கி, “இதுதான்


  1. கிராமமுனிசீபு - கிராமமுன்சீப் முத்துக்கிருஷ்ண நாயுடு.

71