பக்கம்:1911 AD paper copy-சுய சரிதை, வ. உ. சிதம்பரம் பிள்ளை, 1946 print copy.pdf/79

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

 
      வெள்ளையனுக்கு அபயம்!

அவரையொரு வெள்ளையன் அகங்கொடு தள்ளினான்.
அவனைத் தள்ளிடற் காரவா ரித்தனர்.
என்னொடு சென்ற இன்ஸ்பெக்டர் சாய்பு
முன்னாள் விழித்த முகத்தினைக் காட்டி
இரந்தெனை வேண்டினன்.“யாவரும் செல்க :உரந்தனை அடக்கலே உத்தமம்" என்றேன்.
செப்பிய வெள்ளையன் சென்றதற்கிரங்கினான்.
தப்பிலர் யாரெனச் சாற்றி வெளிவந்தேன்
பலபல நண்பர் பட்சமொடுதொடர்ந்ததால்
நலமன்று வண்டியை நண்ணுதல்
என்றியான்
காலால் நடந்து கடுகினேன் என்னகம்.
சாலவும் கூட்டம் சார்ந்தவண் நின்றது.
"சுதேசியம் வளர்க்குக, தொல்லுயிர் நீங்கினும் இதேயென் பிரார்த்தனை என்றவர்க் குரைத்தேன்.
சீலர் பலரும் " செப்புக ஐயா !பாலர் கொண் டாட்டப் பண்புக்" கென்றனர்.
"மறுத்த மூடர்கள் மாய்ந்தன வாயினும்
பொறுத்துச் செய்தலே பொறுத்த"மென்
[றுரைத்தேன்.
“ செய்தன வெல்லாம் சீரழி வதனால்
மெய்தவன் படமின்று வெளிவரும் படிக்கும்
செறித்த பிறவெலாம் செய்தல்பின் னென்றும்
குறித்த படிநீர் கூறுக" என்றனர்.
74

 

74