பக்கம்:1911 AD paper copy-சுய சரிதை, வ. உ. சிதம்பரம் பிள்ளை, 1946 print copy.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தூத்துக்குடியில் கலகம்:
ஆஷ் அட்டகாசம்.

ஆசு படையுடன் அணுகி அவரை
மோசம் செய்திட மூட்டிக் கலகம்
தடியால் அடிப்பித்தான் சார்ந்தநம் மவரை;
வெடியால் சுட்டான் வெளிவர விடாது.
ஆசுவின் குதிரையை அடித்தவர் தள்ளினார்,
நாசமென் னுயிர்க்கென நவின்றவன் ஓடினான்!
தடித்த கொழுத்த சப்பின்ஸ் பெக்டரை
அடித்தும் மிதித்தும் அளவில புரிந்தனர்.
சுட்ட வெடிகளைத் தூள்தூ ளாக்கி
எட்டிய இடங்களில் எறிந்து தொலைத்தனர்.
தெருவெலாம் நம்மவர் சிரித்துத் திரிகிறார்
மருவிலேம் என்றவர் மனத்தினில் உன்னியே.
வெள்ளையர் சகலரும் மிகமிக நடுங்கிக்
கள்ளரைப் போன்றவண் கரந்து மறைந்தனர்.
நமதுநன் மனையுளார் நன்றா யிருக்கிறார்
நுமதுநற் றுணைக்கு நோக்கியிவண் வந்தேன்.
எண்ணிய படியான் இச்சிறையை விஞ்சு
நண்ணி இருவென நவின்றனன் என்றான்


84