பக்கம்:1911 AD paper copy-சுய சரிதை, வ. உ. சிதம்பரம் பிள்ளை, 1946 print copy.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

சிங்கக் குருளை பிரசங்கம்.


வாரம் ஒருமுறை வந்தவர்
               ஒருமணி
நேரம் என்னோடு நிகழ்ந்தன
                 பேசினர்
தினமும் என்னோடு சென்றுபிர
                    சங்கம்
மனமொடு கேட்டவென் மகன்
              உலகக நாதன்
ஐந்து வயதுள்ள அறியாப்
                    பாலகன்,
மைந்தர் பலரை வலனொடு கூட்டி
 துநம் தேசம் ; இதிலியாம்
                      காணும்
எதுவும் தம் பொருள்.இனி
               வெள்ளையரை
வெருட்டுவீ ரென்று வியம்பி
                  விளையாட
“பாரீர் சிறுவனை;பவகர்தைக்
                     கேளீர்"
எனப்பல பெரியரும் இயம்பிக்
                      கூடிடத்
தினப்படி பிரசங்கம் செய்தனன்
                    அவனும்
போலி வார்த்தைப் புகலவும்
               இன்ஸ்பெக்டர்
“மேலே அவரை தும் வீட்டினுள்
                  வைத்தால்
அவருக் கடுத்தன அடுக்கும்
                   உமக்கும்
சுவருக்கு வெளியே
      தொலைத்திடும் என்றனர்.
சண்முகம் மனைவி சரீரம்
                நடுங்கியென்
பெண் முகம் பார்த்துப் பேசவும்
                    என்னவர்
குலமா ணிக்கபுரம் கோவிலை
                   நண்ணிக்
குலமா ணிக்கமெனக் கூறிட
                   நின்றனர்.
______________________________
பாளையங்கோட்டைக்கு அருகிலுள்ள ஒரு சிற்றூர். இப்பொழுதும் அங்குதான் சிறையுள்ளது.முன்னர் அவ்வூரில் கொலைக் குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டதால், மாணிக்கபுரம் கொலை மாணிக்கபுரம் ஆயிற்று.
88

 

88