பக்கம்:1915 AD-பாடற்றிரட்டு, வ உ சி.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டித்துரையவர்கள் வாழ்த்து

உற்றன னிங்கே யொருபெரும் பாக்கியம்
பெற்றன னென்ற பெருங்களி யதனால்
சுற்றவர் விளங்குங் கழகத் தரசே!
மற்றென் வார்த்தை மதியில் தாயினுஞ்
சற்றே கேண்மதி தண்ணருட் டோன்றால்!
பாசுக வடிவாய்ப் பரந்து நிற்கும்
அரனுடை யிலக்கண மான்ம விலக்கணம்
அரனடி யான்மா வடையவொட் டாமற்
பெரிதுந் தடையாய்ப் பிரித்து நிற்கு
மாயையை நீக்கி மாணடி சேர்க்கு
மோன நிலையின் முதிரச் செய்யு
ஞான நிலையு நயம்பட மொழிந்து
மற்று முள்ளநன் மார்க்க மனைத்தும்
பெற்று நிற்கும் பெற்றியை முறைமுறை
யுற்றுநின் றவற்றி னொன்றும் விடாமல்
முற்றுந் திறமையின் மொழிந்து பின்னர்த்
திறம்பெறு தமிழின் சிறப்பெலாந் திரட்டி
யறம்பொரு ளின்ப மனைத்து நல்கிப்
பந்த மகற்றிப் பவமு மகற்றி
அந்தமில் வீடு மளிப்ப ததுவெனா
எத்திறக் கவிஞரு மிங்குமு னியம்பா
அத்திற மாக வணிபெறப் புகன்றே
எம்மனோ ரெவரு மீடேறும் வண்ணஞ்
செம்மை புரிந்த திட்பமென் கூறுவன்?
மன்னர் விரும்பு மதுரைமா நகரின்
முன்ன ரிருந்த முழுதுணர் பாண்டியர்
இனிதாந் தமிழை யெழிலுற வளர்த்து
23