பக்கம்:1915 AD-மெய்யறிவு, வ உ சி.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

________________

30மெய்யறிவு அ-ம் :-மாலையில் பலத்தைக் கழித்து, நான் ஈசனது தாளைத் தொழுது, நன்கு அட்டகோது மையை நெய்யோடும் பாலோடும் சேர்த்து காலைத்து நாழிகைக்குள் உண்டு, பின் குறுநடையைக் கொண்டு துயில்;மதிக்கு ஓர் கால் மாதை மருவு. ப-ரை:-மாலை - சூரிய அஸ்தமன சமயத் தில். மலம் கழித்து - மலஜலங்களைக் கழித்து, மாண் ஈசன் தாள் தொழுது - மாட்சிமை பொ ருத்திய கடவுளது அருளடியைச் சிந்தித்து வணங்கி, நன்கு அட்ட கோதுமையை நெய்யோடும். பாலோடும் சேர்த்து - என்றாகச் சமைக்கப்பட்ட கோதுமை யரிசி உணவை நன்றாகச் காய்ச்சப் பட்ட நெய்யோடும் பாகோடும் சேர்த்து, நாலு ஐந்து நாழிகைக்குள் - இரவு நான்கு நாழிகைக்கு மேல் ஐந்து நாழிகைக் குள்ளாக, உண்டு- சாப்பிட்டு, பின், குறுநடை கொண்டு-பின்னர் சிறிது நேரம் மெதுவாக உலாளி, துயில் உறங்குவாயாக; மதிக்கு ஓர் கால்-மாதத்திற்கு ஒரு முறை, மாது-மனைவியை, மருவு-கூடு. க-ரை:-மாலையிலும் மலஜலங்களைக் கழிக்க வேண்டும்; கடவுளைத் தியானிக்க வேண்டும்; மாலை ஐந்து நாழிகைக்குள் நன்றாகச் சமைக்கப்பட்ட கோதுமையரிசி உணவை நெய் பால்களோடு சாப்பிட வேண்டும். அதன் பின்னர் சிறிது நேரம் மெதுவாக படாவ வேண்டும்; பின் வித்திரைக்குச்சென்" வேண்டும். மாதத்திற்குஒரு முதை போக போட்டு சே வேண்டும்.