பக்கம்:1915 AD-மெய்யறிவு, வ உ சி.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

________________

              தவஞ் செய்தல்.
  காண் அசை. செய் என்பது வினைத்தொகை,

சாதியெனும் பொய்கொண்டுந் தன் சமயப் பேய்கொண்டு மாதினது நோய்கொண்டும் வாழுயிர்க-ளாதி மகவென்று நோக்காது மாணாத செய்வர் தகவென்றும் பேணா தவர்.

அ-ம் :- தகவை என்றும் பேணாதவர், சாதி என் னும் பொய்யைக் கொண்டும், தன் சமயப் பேயைக் கொண்டும், மாதினது நோயைக் கொண்டும், வாழ் உயிர்களை ஆதியின் மக வென்று நோக்காது மாணாத செய்வர்.

ப-ரை :-தகவு என்றும் பேணாதவர்-பெருமை யை ஒரு போதும் விரும்பாதவரே, சாதி எனும் பொய் கொண்டும் -சாதி என்னும் பொய்யைக் காரண மாகக் கொண்டும், தன் சமயப் பேய் கொண்டும். தனது மதமாகிய பேயைப் பற்றியும், மாதினது நோய் கொண்டும்- காம நோயைக் கொண்டும், வாழ் உயிர்கள் - உடம்போடு. கூடி வாழுகின்ற உயிர்களை, ஆதி மக என்று நோக்காது - மெய்ப்பொருளின் குழந்தைகளென்று கருதாது, மாணாத செய்வர் - அவற்றிற்குத் துன்பங்களைப் புரிவர். க-ரை:- பிற உயிர்களுக்குத் தீங்கு புரிவ தற்கு முக்கிய காரணம் மூன்றென்பதும், அவை சாதிபேதமும் மதபேதமும் காமமுமாம் என்பதும் கூறப்பட்டன.