பக்கம்:1915 AD-வள்ளியம்மை சரித்திரம், வ உ சி.pdf/43

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நாயகனது நண்பர்களை உபசரித்தமை.

27


நல்லாள் எனும்பேரிந் நங்கையனார்க் கேற்குமன்றி
எல்லா மடவார்க்கும் ஏற்குமோ —- தொல்புவியோர்
ஐம்பொனென்றால் மற்றெவைக்கும் ஆமோ அவிரொளிசேர்
பைம்பொன்னின் மிக்குயர்ந்த பண்பு. ௱௫௪

நாயகனது நண்பர்களை உபசரித்தமை.


உத்தமிதன் கேள்வற் குறுநட்பா மாடவர்தன்
சித்தமகிழ் நட்பாந் தெரிவையரென் —--றித்தகையோர்
தம்பால் நடந்தஉயர் தன்மையையுங் கூறுவேன்
அன்பாத் தெரிந்தவணம் யான். ௱௫௨

மெய்நட்பே மிக்கோர் விரும்பி யினிதாகச்
செய்நட்பே மிக்கோன் சிதம்பரத்தை —- மொய்நட்போர்
ஆங்கவனுள் ளன்பாம் அமிழ்துண்போர் அன்னவனை
நீங்குவரோ நீங்கார் நிதம். ௱௫௩

ஆங்கவர்கட் கெல்லாம்நல் அன்னையினும் மேலாகப்
பூங்கொடிநல் லன்பே புரிந்துநிதம் —-- பாங்குடனே
இன்னமுதம் மாண்போ டினிதருந்தச் செய்குவாள்
நனமுகமன் கூறி நயந்து. ௱௫௪

சித்திபுரி வார்க்குஞ் சிறந்த துறவிகட்கும்
உத்தியோ கத்தர்க்கும் உற்றோர்க்கும் —--மற்றோர்க்கும்
தன்கேள்வ னுக்குந் தருவாள் விருப்பறிந்து
நன்கே யுணவு நலாள். ௱௫௫

தன்மனையி லேயருந்தாச் சாதியோர்க் கந்தணர்தம்
நன்மனையி லேமிகவும் நன்காக—- இன்னமுதம்
நெய்பால் தயிருடனே நித்தம் இனிதருந்தச்
செய்வாள் குறிப்புத் தெரிந்து. ௱௫௬