திருநெல்வேலி ஜில்லா அசிஸ்டண்டு சர்ஜனாயிருந்த
மிஸ்டர். இடா. பி. ஈவர்ஸ் துரையவர்கள் கடிதம்.
“அன்பார்ந்த மிஸ்டர் சிதம்பரம்பிள்ளை யவர்களே,
உங்களுடைய உத்தமமனைவியவர்களின் மரணச் சமாசாரம் கேள்வியுற்று மிகப்பெருந்துக்கமுற்றேன். உங்களுக்கு நேர்ந்த இவ்வரிய பெரிய நஷ்டத்தைக் குறித்து யானும் எனது மனைவியும் உங்கள் மீது மிகுந்த அநுதாபப்படுகின்றோம். இது கடவுள் இச்சை; நாம் முணுமுணுக்கக்கூடாது ; நம் உதவிக்கு அவரையே நோக்கவேண்டும். உங்களுடைய துன்பங்களையெல்லாம் நீங்கள் சகிக்கத்தக்க சக்தியைக் கருணாநிதியான கடவுள் நிச்சயமாக உங்களுக்கு அளிப்பார்.
உங்கள் மனைவியவர்கள் என்ன வியாதியினால் எவ்வாறு இறந்தார்களென்ற விவரங்களனைத்தையும் அறிய விரும்புகிறேன். அவர்களுக்குச் சிகிச்சை செய்ய சரியான வயித்தியரையாவது மருத்துவச்சியையாவது ஏற்படுத்தினீர்களா? அல்லது சாதாரண அம்பட்ட ஸ்திரீயை நம்பி விட்டுவிட்டீர்களா? அவர்களுக்குச் சிகிச்சை செய்ய யான் அவ்விடத்தில் இல்லாமற் போனதைப்பற்றி மனவருத்தப்படுகிறேன். அந்தோ! அவ்வம்மையவர்கள் இனிமையும், வணக்கமும், சாந்தமும் வாய்ந்தவர்களாயிருந்தார்களே! உங்களுடைய சரியான மேல்விலாசம் தெரியாததனால் இந்த நிரூபத்தை மிஸ்டர் பழனியாண்டி முதலியார் விலாசத்திற்கு அனுப்புகிறேன். நாங்களெல்லோரும் இங்குச் சுக