பாளையங்கோட்டை வக்கீல் ஸ்ரீமாந். எஸ். பழனி
யாண்டி முதலியாரவர்கள் மைத்துனர் காலஞ்
சென்று போன ஸ்ரீமாந் யம். வி. கிருஷ்ணசுவாமி
முதலியா ரவர்கள் கடிதம்.
அன்பார்ந்த அத்தான் அவர்களே,
தங்களுக்கு நேர்ந்துள்ள துக்க சமாசாரத்தைக் கேட்டதுமுதல் எனக்குண்டாயிருக்கிற துக்கத்திற்குக் கங்கு கரை யில்லை. எனது அறிவை யான் திரும்ப அடைந்து, நீங்கள் சென்ற மாதம் 20-ந் தேதி யெழுதிய கார்டுக்குப் பதிலாக இச்சில அநுதாபவார்த்தைகளை வரைய, இத்தனை காலம் எனக்கு வேண்டியிருந்தது.
அந்தோ! இஃது எளிதில் மறக்கப்பட முடியாத ஒரு பெரிய துர்ப்பாக்கியம். என்றாலும், யௌவன புருஷர்களானநாம், திவான் பகதூர் இராமசாமி செட்டியாரவர்களுக்குச் சமீபத்தில் ஒன்றன் பின் ஒன்றாக நேர்ந்த துக்கங்களை யெல்லாம் அவர்கள் எவ்வாறு சகித்தார்களோ அவ்வாறே, நமக்கு நேர்ந்துள்ள, நமது நெஞ்சைப்பிளக்கின்ற, துக்கத்தைச் சகிக்கவேண்டும். இதைப்பற்றி இன்னும் எழுதவேண்டியதில்லை. ஏனென்றால், அவ்வாறு செய்தல் உங்கள் துக்கத்தை ஞாபகப் படுத்துதற்குரிய ஒரு கருவியாகும். என் சகோதரி