பக்கம்:1916 AD-மனம் போல வாழ்வு, வ உ சி.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

நினைப்பும் நிலைமையும். ன்மா தன்னிடத்து தனை அந்தரங்கம வைந்திருக்கிறதோ,தான் எதனை நேசிக்கிறதோ, தான் எதற்குப் பயப்படுகிறதோ, அதனைக் கவர்கின்றது. அது தனது உயர்ந்த கோரிக்கைகளின் உயர்ந்த ஸ்தா னத்திற்கு உயர்கின்றது; அது தனது தாழ்ந்த அவாக் களின் தாழ்ந்த ஸ்தானத்திற்குத் தாழ்கின்றது; அது தனக்குரிய ஸ்தானத்தைப் பெறுதற்குச் சந்தர்ப்பங் கள் கருவிகளாகின்றன. மனமாகிய நிலத்தில் விதைத்த, அல்லது விழுந்து முளைத்த, ஒவ்வொரு நினைப்பு- வித்தும், விரைவிலாவது தாழ்ப்பிலாவது, தனக்குரிய செயலாக மலர்ந்து பின் னர்த் தனக்குரிய நிலைமையும் சந்தர்ப்பமு மாகிய கனி களைக் கொடுக்கின்றது. நல்ல நினைப்புக்கள் நல்ல கனிகளையும், கெட்ட நினைப்புக்கள் கெட்ட கனிகளை யும் கொடுக்கின்றன. நிலைமைகளாகிய புறஉலகம் நினைப்பாகிய அகஉல கத்திற்குத் தக்கபடி தன்னைத் திருத்திக்கொள்கின்றது; இன்பத்தைத் தரும் புறநிலைமைகளும் துன்பத்தைத் தரும் புறநிலைமைகளும் முடிவில் ஒருவனுக்கு நன்மை பயக்கும் கருவிகளே. தனக்குரிய விளையுளைத் தானே அறுத்தெடுத்துக் கொள்ளவேண்டும். மனிதன் இன்ப துன்பங்களின் மூலமாக அறிவை அடைகின்றான். ஒருவன் தன்னை அடிமை கொள்வனவாய்த் தனக் ள் உண்டாகும் அவாக்களையும், நினைப்புக்களையும், 25