பக்கம்:1916 AD-மனம் போல வாழ்வு, வ உ சி.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

நினைப்பும் நிலைமையும் சரியான நினைப்பின் னுள்ள கேர்மையின் பலன்கள். அளவுகருவி இன்பம் அநுபவித்தலே யன்றிப் பொரு ளுடைமை யன்று; பிசகான நினைப்பின் அளவுகருவி துன்பம் அநுபவித்தலே யன்றிப் பொருளின்மை யன்று. ஒருவன் தனவந்தனாயினும் துன்பமே அநுப வித்திருக்கலாம். மற்றொருவன் தரித்திரனாயினும் இன் பமே அநுபவித்திருக்கலாம். தனத்தை விவேகத்தோடு சரியான வழியில் விநியோகித்தால் மாத்திரமே, செல் வமும் இன்பமும் ஒருவனிடத்தில் சேர்ந்திருக்கும். தரித்திரன் தனது நிலைமைகள் அநியாயமாகத் தன் மேல் சுமத்தப்பட்டவை யென்று நினைக்குந்தோறும் அதிக துன்பத்தில் அழுந்துகிறான். த காரணமே. இன்பம் நுகராமையும் துன்பத்தின் மிதமிஞ்சி இன்பம் நுகர்தலும் துன்பத்தின் காரணமே. இவ்விரண்டும் இயற்கைக்கு விரோதமானவை; இவை மனத்தடுமாற்றத்தின் பலன்கள். ஒருவன் சந்தோஷத் தையும் ஆரோக்கியத்தையும் செல்வத்தையும் பெறு கிறவரையில், அவனுக்குச் சரியான நிலைமை ஏற்பட வில்லை என்பது நிச்சயம்; சுற்றுச் சார்புகளோடு இணங்கி உள்ளும் புறமும் ஒத்திருப்பதால், சந்தோஷ மும் ஆரோக்கியமும் செல்வமும் உண்டாகின்றன. ஒருவன் தன் நிலைமையைப்பற்றிச் சிணுங்குதலை யும் நிந்தித்தலையும் விட்டுத் தனது வாழ்க்கையை நடாத்தும் (காட்சிக்குப் புலப்படாத) நீதியை ஆராய 35