உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:1916 AD-மனம் போல வாழ்வு, வ உ சி.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



மனம் போல வாழ்வு.

ஆரம்பிக்கிற பொழுதுதான் மனித இயல்பை உடையவனாகிறான். அவன் அந்த நீதிக்குத்தக்கபடி தனது மனதை இசைத்துக்கொள்ளும்போது, தனது நிலைமைக்கு, மற்றவர் காரணமென்று குற்றம் சாட்டலைவிட்டு, மேன்மையும் உறுதியுமுள்ள நினைப்புக்களைக் கொண்டு பிர வர்த்திக்கிறான்; தவிரவும், தனது நிலைமைகளோடு போராடுதலைவிட்டுத் தான் விரைவில் அபிவிர்த்தியடையும்படி, தனது நிலைமைகளைத் துணைக்கருவிகளாகவும் தனக்குள் மறைந்துகிடக்கும் சக்திகளையும் திறமைகளையும் கண்டுபிடிப்பதற்கு அவைகளைச் சாதனங்களாகவும் உபயோகித்துக்கொள்ள ஆரம்பிக்கிறான்.

பிரபஞ்சத்தில் முதன்மையாக நிற்கும் எக்தி ஒழுங்கேயன்றிக் குழப்ப மன்று ; வாழ்க்கையின் உயிர்நிலை நீதியே யன்றி அநீதி யன்று; உலகத்தில் ஆன் மார்த்தத்தைச் சீர்ப்படுத்தி நடத்திவரும் சக்தி தருமமே யன்றி அதரும மன்று. இஃது இங்ஙன மிருப்பதால், பிரபஞ்சம் சரியாயிருக்கிறதென்று காண்பதற்கு மனிதன் தன்னைத் திருத்திக்கொள்ளவேண்டும். தன்னைத் திருத்துங் காலையில், அவன் பொருள்களைப் பற்றியும் மற்றவர்களைப் பற்றியும் தனது நினைப்புக்களை எவ்வாறு மாற்றுகிறானோ அவ்வாறே பொருள்களும் மற்றவர்களும் தன்னிடத்து மாறுதலுறக் காண்பான்.

இவ்வுண்மைக்குச் சான்று ஒவ்வொரு மனிதனிடத்திலும் உண்டு; கிரமமாக அகத்துள் பார்த்தலாலும்.

36