பக்கம்:1916 AD-மனம் போல வாழ்வு, வ உ சி.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

நினைப்பும் நிலமையும். தன்னைப் பகுத்துப் பார்த்தலாலும், அதனை எளிதில் காணலாம். ஒருவன் தனது நினைப்புக்களை அடியோடு மாற்றிவிட்டால், உடனே அஃது அவனுடைய புறநிலை மைகளில் உண்டுபண்ணும் விரைவான மாறுதல்களைக் கண்டு, அவன் ஆச்சரியம் அடைவான். மனிதர் நினைப்பை அந்தரங்கமாக அடக்கிவைத்துக்கொள்ளலா மென்று கருதுகின்றனர் ; அது முடியாது.நினைப்பு விரைவில் பழக்கமாகின்றது; பழக்கம் விரைவில் நிலைமையின் உருவை அடைகின்றது. மிருகத்தன நினைப்புக்கள் மதுவுண்டலும் காமநுகர்ச்சியு மாகிய பழக்கங்களாகின்றன ; அப்பழக்கங்கள் மையும் விபாதியுமாகிய நிலைமைகளின் உருக்களை அடை கின்றன: பல்வகை அசுத்த நினைப்புக்களும் தளர்ச் மா வறு சியையும் குழப்பத்தையும் கொடுக்கும் பழக்கங்க ளாகின்றன; அப்பழக்கங்கள் கேடும் தவறுமாகிய நிலைமைகளின் உருக்களை அடைகின்றன. பயமும் சந் தேகமும் சஞ்சலமும் பொருந்திய நினைப்புக்கள் பல ஹீனமும் உறுதியின்மையும் தீர்மானமின்மையுமான பழக்கங்க கின்றன; அப்பழக்கங்கள் தோல்வியும் வறுமையும் அடிமைத்தனமுமாகிய நிலைமைகளின் உருக்களை அடைகின்றன. சோம்பலான நினைப்புக்கள் அசுத்தமும் அயோக்கியமும் பொருந்திய பழக்கங்க ளாகின்றன; அப்பழக்கங்கள் பிணியும் இரத்தலுமாகிய நிலைமைகளின் உருக்களை அடைகின்றன. வெறுப்பும் குற்றங்காண்டலும் பொருந்திய நினைப்புக்கள் குற்றம் உ 37