பக்கம்:1916 AD-மனம் போல வாழ்வு, வ உ சி.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மனம் போல வாழ்வு. சாட்டுதலும் தாக்குதலுமாகிய பழக்கங்களாகின்றன ; அப்பழக்கங்கள் துன்பமுறுதலும் தாக்கப்படுதலுமா கிய நிலைமைகளின் உருக்களை அடைகின்றன. பலவித சுயநய நினைப்புக்களும் சுயலாபத்தை நாடும் பழக் கங்க ளாகின்றன ; அப்பழக்கங்கள் கொஞ்சம் ஏறக் குறையக் கஷ்டங்களை உண்டாக்கும் நிலைமைகளின் உருக்களை அடைகின்றன. ஆனால், பலவகை நல்ல நினைப்புக்களும் அன்பு செலுத்துதலும் அருள்புரி தலு மாகிய பழக்கங்களாகின்றன ; அப்பழக்கங்கள் மனோகரமும் குதூகலமுமான நிலைமைகளின் உருக் களை அடைகின்றன. பரிசுத்த நினைப்புக்கள் மித மாக அநுபவித்தலும் தன்னை யடக்கியாளுதலுமாகிய பழக்கங்க ளாகின்றன ; அப்பழக்கங்கள் சாந்தமும் சமாதானமு மாகிய நிலைமைகளின் உருக்களை அடை கின்றன. தைரியமும் தன்பொறுப்பும் திடமும் பொருந் திய நினைப்புக்கள் ஆண்மைக்குரிய பல பழக்கங்க ளாகின்றன; அப்பழக்கங்கள் வெற்றியும் நிறைவும் சுவாதீனமுமாகிய நிலைமைகளின் உருக்களை அடைகின் றன.ஊக்க நினைப்புக்கள் சுத்தமும் உழைப்பு மாகிய பழக்கங்களாகின்றன ; அப்பழக்கங்கள் இன்பத்தைத் தரும் நிலைமைகளின் உருக்களை அடைகின்றன. மென் மையும் பொறுமையும் பொருந்திய நினைப்புக்கள் சாந்த மான பழக்கங்க ளாகின்றன ; அப்பழக்கங்கள் காப்பை யும் வாழ்வையும் நல்குகின்ற நிலைமைகளின் உருக்களை அடைகின்றன. அன்பும் பரோபகாரமும் பொ 38 ருந்திய •