மனம் போல வாழ்வு
னத்தையும் உண்டாக்காமல், கெட்ட விதி அவனைவிட்டுப் பறந்துபோய்விடும். பல நிற உருவங்களைக் காட்டும் (காலிடாஸ்கோப் என்னும்) கண்ணாடியை ஒத்தது உலகம். நிமிஷத்துக்கு நிமிஷம் வெவ்வேறு விதமாகும் உலகத்தோற்றங்களெல்லாம், இடைவிடாமல் சலித்துக் கொண்டிருக்கும உங்கள் நினைப்புக்களின் பிரதிபிம்பப்படங்களே.
வெண்பா.
எந்நிலைமை நீ அடைய எண்ணுவையோ நின்னுள்ளுள், அந்நிலைமை நீ அடைவாய் அப்பொழுதே ;- தந்நிலைமை தந்ததென்பர் தோல்வியெலாம் சாரமிலார்; நின்றுநகும் பந்தமில்ஆன் மாஅலரைப் பார்த்து.
காலமொடு தேசம் கடந்துகிற்கும் ஆன்மாநின் மூலவிதியைவென்று மூன்செல்லும்:- *பாலின் நிலைமைகளைக் கீழ்ப்படுத்தி நீள் அடிமை ஆக்கித் தலைமையுறும் பல்லவற்றும் சார்ந்து.
காண்டற் கரிய கனசத்தி யாயமனம் ஈண்டரிய ஆன்மாவின் இன்மகவாம்;- வேண்டும் நிலைபலவும் எய்தஅது நேர்வழியை ஆக்கும், மலைபலவும்
- ஊடறுத்து மாய்த்து.
தாழ்ப்பினைக் கண்டு தளர்வுறாய்; உள்ளேமெய்க் காழ்ப்பினைக் காண்பார்போல் காத்திருப்பாய்- காழ்ப்புருவ ஆன்மா எழுந்துளத்தை ஆளுங்கால் செய்வர்பணி வான்மா அமரரும்முன் வந்து.
- சாரம் இல்லார் = அறிவில்லார்,
- பாலின் = ஊழால் எந்த,
- ஊடு அறுத்து = நடுவே அறுத்து,
- தாழ்ப்பு = தாமதம். காழ்ப்பு = அறிவு
.
40