பக்கம்:1916 AD-மனம் போல வாழ்வு, வ உ சி.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

நினைப்பும் சரீரமும் ஆரோக்கியமும் மனம் ஆண்டான் : சரீரம் அடிமை. முன்னாலோ சனையோடாவது தன்னியல்பிலாவது மனம் கொள் கின்ற நினைப்புக்களை ஒட்டியே சரீரம் நடக்கின் றது. தீய நினைப்புக்களாலும் விசன நினைப்புகளா லும் சரீரம் பிணியையும் அறிவையும் விரைவில் அடைகின்றது. நல்ல நினைப்புக்களாலும் சந்தோஷ நினைப்புக்களாலும் சரீரம் யென்வனத்தையும் அழகை யும் பெறுகின்றது. வியாதியும் ஆரோக்கியமும் நிலைமைகளைப் போ லவே. நினைப்பில் வேரூன்றியிருக்கின்றன. கேவல நினைப்புக்களை வியாதியுள்ள சரீரம் வெளிப்படுத்தும். அச்சத்தாலுண்டாகும் நினைப்புக்கள், மனிதனை ஒரு வெடிகுண்டு எவ்வளவு துரிதத்தில் கொல்லுமோ அவ்வளவு துரிதத்தில், கொல்லக் கண்டிருக்கிறோம். அவ்வளவு வேக மில்லாவிட்டாலும் அவை வெடிகுண் டுபோலவே அநேக மனிதர்களை இடைவிடாது கொன்று கொண்டிருக்கின்றன. வியாதி வருமோ என்று பயப் படுகின்றவர்கவே விபாதியை அடைகின்றவர்கள். மனக்கவலை, சரீரம் முழுவதிலும் விரைவில் தடுமாற்ற ண்டாக்கி,வியாதி வருவதற்கு வழிசெய்துவைக்கின் றது. பரிசுத்தமற்ற நினைப்புக்களைச் சரீரம் நிறை வேற்றாவிட்டா லும், அவை தரவு மண்டலத்தைச் சீக்கிரத்தில் தகர்த்துப் பின்னப்படுத்திவிடும். 11