மனம் போல வாழ்வு.
பலமும் சுத்தமும் சந்தோஷமும் பொருந்திய நினைப்புக்கள் சரீரத்துக்கு ஊக்கத்தையும் ஆரோக்கியத்தையும் அழகையும் கொடுக்கின்றன. சரீரம் மென்மையுள்ளதும் எப்படி வேண்டினாலும் அப்படி வளைய்த்தக்கதுமான ஒரு கருவி; அதில் எந்த நினைப்புக்கள் பதிகின்றனவோ அந்த நினைப்புக்களோடு அஃது இணங்கி நடக்கின்றது; பழக்கங்களாக மாறிய நினைப்புக்கள், தமது நல்ல பலன்களையோ கெட்ட பலன்களையே, சரீரத்தில் உண்டுபண்ணுகின்றன.
மனி தர்கள் எவ்வளவு காலம் அசுத்த நினைப்புக்களைக் கொண்டிருக்கிறார்களோ அவ்வளவு காலமும் அசுத்தமும் விஷமும் கலந்த இரத்தத்தைக் கொண்டிருப்பார்கள். சுத்த ஹிருதயத்திலிருந்து சுத்த வாழ்க்கையும் சுத்த சரீரமும் உண்டாகின்றன. செயல், வாழ்வு, தோற்றம் என்பவைகளுக்கு நினைப்பே ஊற்றுக்குழி; ஊற்றைச் சுத்தப்படுத்தினால் அனைத்தும் சுத்தமாயிருக்கும்.
தனது நினைப்புக்களை மாற்றிக்கொள்ளாதவன் தனது உணவுகளை மாற்றிக்கொள்வதால் பயனில்லை ; தனது நினைப்புக்களைச் சுத்தமாக்கிக் கொண்டவன் அசுத்த உணவை விரும்பமாட்டான்.
சுத்த நினைப்புக்கள் சுத்தபழக்கங்களை உண்டு பண்ணுகின்றன. மகாத்துமா ன்று சொல்லப்படுவோன், உடம்பு குளிக்காவிட்டால் மகாத்துமா அல்லன். தனது நினைப்புக்களைப் பலப்படுத்திச் சுத்தஞ்செய்து
42