உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:1916 AD-மனம் போல வாழ்வு, வ உ சி.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மனம் போல வாழ்வு.

எவ்விதம் உள்ளனவோ அவ்விதமே இருப்பீர்கள். உங்களை ஆளும் அவா சிறியதாயின், நீங்களும் அதற்கேற்றபடி சிறியரே ஆவீர்கள்; உங்களை ஆளும் கோரிக்கை பெரியதாயின், நீங்களும் அதற்கேற்ற படி பெரியர் ஆவீர்கள். ஸ்டாண்டன் கிரக்காம்டேலிஸ் என்பவர் அலங்கரித்துச் சொல்லியபடி "நீங்கள் லேககராய்க் கணக்குகள் எழுதிக்கொண்டிருக்கலாம்; திடீரென ஒருநாள் எழுந்து, உங்கள் மனோலக்ஷியங்களுக்குத் தடையாக நீடித்த காலம் தோன்றிக்கொண்டிருந்த உங்கள் அறையை விட்டு வெளியே செல்வீர்கள்; அவ்விடத்தில் உங்கள் பிரசங்கத்தைக் கேட்பதற்குச் சித்தமாயிருக்கும் அநேகரைக் காண் பீர்கள் — இன்னமும் உங்கள் காதில் எழுதுகோலும், உங்கள் விரல்களில் மைக்கறையும் இருக்கலாம் - உங்கள் மனத்தின் ஆவேசமான ஞானத்தைத் தாரைதாரையா கப்பொழிவீர்கள். நீங்கள் ஆடுகளை மேய்த்துக்கொண் டிருக்கலாம்; நீங்கள் ஆடுமேய்க்கும் சத்தத்தோடும் திறந்தவாயோடும் நகரத்துக்குச் செல்ல, உங்கள் ஆவே சம் உங்களை ஒரு சித்திர ஓடாவியிடம் தள்ளிக்கொண்டு போகலாம். சிலநாளானபின் சித்திரவோடாவி உங்களைப் பார்த்து 'நான் இனிமேல் உங்களுக்குக் கற்பிக்கவேண்டுவது ஒன்றுமில்லை.' என்று கூறலாம் சமீபகாலத்தில் ஆடுகளை ஓட்டிக்கொண்டிருந்த பொழுது பெருங்காரியங்களை மனோரதித்திருந்த நீங்கள் இப்பொழுது சித்திராடாவி யாகிவிட்டீர்

62