பக்கம்:1916 AD-மனம் போல வாழ்வு, வ உ சி.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மனக்காட்சிகளும் இலக்ஷியங்களும் வாழ்க்கைகள் மாறுதலடைகின்றன. அவன் என்ன சொல்லுகிறானென்று ஆண்களும் பெண்களும் அவா வோடு கேட்கிறார்கள். கேட்டுத் தங்கள் ஒழுக்கங் களைச் சீர்திருத்துகிறார்கள் ; மத்தியமாயுள்ள சூரியன் ஆதாரமாகப் பல கோளங்கள் சூழ்ந்துவருவதுபோல, அவன் ஆதாரமாக எண்ணில்லாத காரியகர்த்தர்கள் அவனைச் சூழ்ந்து வருகின்றார்கள். அவனுக்குப் பாலி யத்தில் தோன்றிய மனக்காட்சி இப்பொழுது பிரத்தி யகூ அநுபவமாக இருக்கிறது. அவன் தனது ம லக்ஷியத்தோடு ஐக்கியமாகியிருக்கிறான். இதனை வாசிக்கிற பாலியர்களே! நீங்களும் உங் கள் ஹி ருதயத்தில் காணும் காட்சி (வீண் விருப்பம் அன்று) உயர்ந்ததாயிருப்பினும், தாழ்ந்ததாயிருப்பி னும், அல்லது அவ்விரண்டின் கலப்பாயிருப்பினும், அதனைப் பிரத்தியக்ஷத்தில் அநுபவிப்பீர்கள் ; ஏனெனில், நீங்கள் எதனை அந்தரங்கத்தில் அதிகமாக நேசிக்கிறீர்களோ, அஃது உங்களைத் தன்னிடமாக இழுக்கின்றது. உங்கள் சொந்த நினைப்புக்களின் சரியான பலன்களே நீங்கள் கைகாணும் பலன்கள். நீங் கள் எதனைத் தேடுகிறீர்களோ அதனைப் பெறுவீர்கள். அதற்கு அதிகமாகவுங் கிடைக்காது, குறைவாகவுங் கிடைக்காது. உங்கள் தற்கால நிலைமை எஃதாயினுஞ் சரி, உங்கள் நினைப்புக்களும் உங்கள் மனக்காட்சி யும்,உங்கள் மனோலக்ஷியமும் உயர்ந்தால் நீங்களும் உயர்வீர்கள்; அவை தாழ்ந்தால் தாழ்வீர்கள்; அவை 61