பக்கம்:1916 AD-மனம் போல வாழ்வு, வ உ சி.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

யாது, மனம்போல வாழ்வு யார்கள். இவரது கஷ்டங்களையும் கவலைகளையும் அறி இவரது சுகத்தையும் சாந்தியையும் மாத்தி ரம் பார்த்து, அதற்குக் காரணம் "அதிர்ஷ்டம்? என்று கூறுகின்றார்கள்; இவரது நீண்ட பிரயாசை யான யாத்திரையைப் பாராது, இவர் சேர்ந்திருக்கும் இடத்தைமாத்திரம் பார்த்து, அதனை "நல்ல யோகம்" என்று சொல்கின்றார்கள்; இவர் செய்த முயற்சி களைக் கவனியாது, இவர் பெற்றுள்ள பலனை மாத்திரம் பார்த்து, அதனைத் "தற்செயல்" என்கின்றார்கள். மனிதரது சகல காரியங்களிலும் முயற்சிகளும் உண்டு ; பலன்களும் உண்டு. முயற்சி எவ்வளவோ மலனும் அவ்வளவே. காலமென்றாவது, அதிர்ஷ்ட மென்றாவது, ஒன்றில்லை. பேறுகளும், சக்திகளும், உலகவுடைமைகளும், அறிவுடைமைகளும், மோ வுடைமைகளும் முயற்சியின் பலன்கள் ; அவை முற் றுப்பெற்ற நினைப்புக்கள்; செய்து முடித்த காரியங் கள் ; அநுபவித்த மனக்காட்சிகள். உங்கள் மனத்தில் நீங்கள் போற்றிவரும் காட்சி யோ உங்கள் விருதயத்தில் உன்னதமாயிருக்கும் லக்ஷியமோ உங்கள் வாழ்க்கையை ஆக்கிக்கொள்ள முதற்கருவியாகும்; இதுவே உங்களுக்கு அநுபவசித் தியாகும். 64