பக்கம்:1916 AD-மனம் போல வாழ்வு, வ உ சி.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சாந்தி. மனோசாத்தி ஞானத்தின் அழகிய ஆபரணங்க ளில் ஒன்று. அது தன்னை (உடம்பையும் நினைப்பை யும்) அடக்கி யாள்வதற்காகப் பொறுமையோடு நீண்ட காலம் செய்த முயற்சியின் பலன். அதன் உடைமை முதிர்ந்த அநுபவமும், நினைப்பின் செயல்களையும் நியதிகளையும் நன்குணர்ந்த அறிவும் உண்டாயிருப் பதைக் காட்டும் ஓர் குறி. மனிதன் தன்னை நினைப்பிலிருந்து பரிணமித்த ஒரு பிராணியென்று எவ்வளவாக அறிகிறானோ அவ் வளவாக அமைதியை அடைகிறான்; ஏனெனில், அவ் வறிவு நினைப்பின் காரியமாகவே பிறரும் உண்டாயிருக் கின்றன ரென்று அறிவதற்கு ஏதுவாகின்றது. சரியாக அறியப் பழகிக் காரணகாரிய நியதியைக் கவனித்துக் உள்சம்பந்தங்களை மேலும் காரியாகாரியங்களின் மேலும் தெளிவாகப் பார்ப்பதனால், அவன் வீணில் அலப்புவதும் கோபிப்பதும் கவலைப்படுவதும் துக்கிப் பதும் இல்லாமல் நிலையாய் நிதானமாய்ச் சாந்தமா யிருக்கிறான். அமைதியுள்ள மனிதன், தன்னை அடக்கியானக் கற்றுக்கொண்டபடியால், மற்றவர்களோடு ணங்கி நடக்கும் விதத்தை அறிகிறான் ; அவர்களும், தங்கள் மட்டில் அவனது ஞானாதிக்கத்தை மதித்து, அவனிட மிருந்து சில கற்கலாமென்றும், அவன்மீது நம்பிக்கை 65 5