பக்கம்:1916 AD-வலிமைக்கு மார்க்கம், வ உ சி.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
உலகம் மனத்தின் பிரதிபிம்பம்.

யொத்த மனிதரின் சேர்க்கையைக் கொள்கின்றனர். "இனம் இனத்தோடு சேரும்” என்னும் பழமொழி பெரும்பாலார் கொள்ளும் பொருளினும் மிக ஆழ்ந் ததோர் பொருளைக் கொண்டிருக்கிறது ; அது ஜடவுலகத்திலுள்ள ஒவ்வொன்றும் தன் தன் இனத்தோடு சேர்ந்திருக்கிறது போலச் சித்துலகத்திலு முள்ள ஒவ்வொன்றும் தன் தன் இனத் தோடு சேர்ந்திருக்கிற தென்ற உண்மையையும் விளக்கு கின்றது.

வெண்பா.

அன்புகொள வேண்டினுயிர்க் கன்பு செய்வாய்;மெய்வேண்டின்
இன்பமொடு மெய்மொழிவாய் ; ஏனையர்க்கு-முன்பெதனை
நல்குவையோ அஃது நினை நண்ணும் ; நின துள்ளம்
நல்குபிம்பம் நின்னுலகம் ; நாடு.

நீங்கள் உங்கள் மரணத்திற்குப் பின் ஒரு பேரின்ப உலகத்தை அடைய வேண்டுமெனக் கோரிக்கொண்டிருப்பீர்களாயின், இதோ! ஒரு சந் தோஷ சமாசாரம் உங்களுக்குச் சொல்லுகிறேன். அப்பேரின்ப உலகத்தில் நீங்கள் இப்பொழுதே பிர வேசித்துப் பேரின்பத்தை அநுபவிக்கலாம் ; அப்பே ரின்ப உலகம் பிரபஞ்சம் முழுவதிலும் நிரம்பியிருக் கிறது. அஃது உங்கள் அகத்துள்ளேயும் இருக்கிறது. அதனை நீங்கள் கண்டு அடைந்து அநுப

21