பக்கம்:1916 AD-வலிமைக்கு மார்க்கம், வ உ சி.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
உலகம் மனத்தின் பிரதிபிம்பம்.
நிலமண்டில ஆசிரியப்பா.

உலகினைத் திருத்தி, அஃ துற்றுள பலவகைக்
கேட்டையு மழிவையு மோட்டி யொழிக்கவும்,
களைநில மனைத்தையும் விளைநில மாக்கவும்,
பாலை வனங்களைச் சோலையா மாற்றவும்,
உன்னுவை யாயின், நின்னைத் திருத்தே.

உலகினை நீடு வலனொடு பிணைத்துள
மறத்தளை களையறுத் துலகைவெளி யேற்றி,
உடைந்த உளங்கள் திடங்கொள உதவவும்,
துயரினை யொழித்துச் சுகமுறச் செய்யவும்,
விரும்புவை யாயின், அறுக்கநின் தளையே.

உலகின் நீண்ட பிணிகளைத் தீர்த்ததன்
துயரையும் துன்பையும் மயலையும் தொலைக்கவும்.
பிணியெலாம் தீர்த்ததில் பேரின்ப மாக்கவும்.
துன்பமுற் றார்க்கெலாம் இன்பம் நல்கவும்,
நினைப்பை யாயின், நின்பிணி தீரே.

உலகின் மரணக் கனவி னின்றும்
அமரி னின்றும் உலகை யெழுப்பிஅஃ
தன்பும் நட்பும் அறிவும் அழிவிலா
வாழ்வின் ஒளியும் மன்னிடச் செய்ய
எண்ணுவை யாயின், எழுப்புக நின்னையே.

23