பக்கம்:1916 AD-வலிமைக்கு மார்க்கம், வ உ சி.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
விரும்பாத நிலைமைகளை விலக்கும் வழி.

துன்பம் நித்திய இன்ப சொரூப மெய்ப் பொருளை ஜீவன் மறைப்பதனா லுளதாகும் நிழலென்றும், உலகம் ஒவ்வொருவருக்கும் தத்தம் பிரதிபிம்பத்தைக் காட்டுகின்ற கண்ணாடி. யென்றும் கண்டோம். இப்பொழுது நாம் உறுதியுள்ளவையும் எளிதில் ஏறத்தக்கவையு மான படிகளின் வழியாக நியாய ஒளியை அபரோட்சமாகக் காணத்தக்க மேல் தட்டுக்கு எறுவோம். இந்நியாய ஒளியைக் கண்ட பின்னர், பிரபஞ்சத்திலுள்ள ஒவ்வொன்றும் கா ரணகாரிய நியதிக்கு உட்பட்டிருக்கிற தென்ற ஞானமும், எஃதும் அந்நியதியி லிருந்து விலக முடி யாதென்ற ஞானமும் உண்டாகும். மனிதனுடைய மிக அற்பமான நினைப்பு, சொல், செயல் முதற் கொண்டு வானிலுள்ள நட்சத்திரக் கூட்டங்கள் வரை யுள்ள அனைத்தையும் அந்நியதி ஆள்கின்றது. ஒரு நிலைமை காரணமில்லாது ஒரு கணமும் இருக்கமுடி யாது. ஏனெனில், அத்தகைய நிலைமையின் இருப்பு காரணகாரிய நியதியை மறுத்ததாகவும் அழித்த தாகவும் முடியும். ஆதலால், வாழ்க்கையின் நிலைமை ஒவ்வொன்றும், ஒழுங்கும் நேர்மையு முள்ள காரண காரிய நியதியில் கட்டுப்பட்டிருக்கிறது ; ஒவ்வொரு நிலைமையின் மர்மமும் காரணமும் அதினுள்ளேயே அடங்கியிருக்கின்றன. "வினை விதைத்தவன் வினை - யறுப்பான் ; தினை விதைத்தவன் தினை யறுப்பான்.”

24