பக்கம்:1916 AD-வலிமைக்கு மார்க்கம், வ உ சி.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆரோக்கியமும் வெற்றியும் வலிமையும், தூய்மையு முள்ள மனிதனை நோயும் தோல்வியும் எளிமையும் அணுகமாட்டா; ஏனெனில், அவற்றைக் கிரகிப்பதற்கும் போஷிப்பதற்கும் அவனிடத்தில் - யாதொன்று மில்லை, - சரீரநிலைமைகள் பெரும்பாலும் மனோநிலைமை களால் ஏற்படுகின்றன; இவ்வுண்மையை ஜடதத்துவ சாஸ்திரிகளும் அங்கீகரிக்கத் தலைப்பட்டுவிட்டார் கள். தனது சரீரம் தன்னை எவ்வாறு செய்கிறதோ அவ்வாறே மனிதன் ஆகிறானென்னும் பழைய நாஸ் திக நம்பிக்கை விரைந்து நீங்கிக்கொண்டும், அதற்குப் பதிலாக மனிதன் தனது சரீரத்திற்கு மேற்பட்டவ - னென்றும் தனது நினைப்பின். வலிமையால் தனது சரீரத்தை எவ்வாறு செய்கிறானோ அவ்வாறே அஃது ஆகிறதென்னும் ஓர் ஆஸ்திக நம்பிக்கை விரைந்து உண்டாகிக்கொண்டும் வருகின்றது. ஒரு மனிதன் அஜீரண நோயால் வருந்துகின்றமையால் அவன் " மனத்தளர்ச்சி யுறுகிறானென்று நம்புவதை விட்டு, அவன் மனம் தளர்ச்சியுற்றிருப்பதால் அவன் அஜீர ணத்தை அடைகிறானென்று இப்பொழுது ஒவ் வோர் இடத்திலு முள்ள மனிதர் நம்பிவரு கின்றனர். சகல வியாதிகளுக்கும் உரிய மூலம் மனத்தி லிருக்கிறதென்ற உண்மை சமீபகாலத்தில் சாதாரண ஞானமாய் விடும். மூலத்தையும் வேரையும் மனத்தில் கொண்டிராத தீமை எதுவும் பிரபஞ்சத்தில் இல்லை; துன்பமும் பாவமும் வியாதியும் துக்கமும் - உண்மை