பக்கம்:1916 AD-வலிமைக்கு மார்க்கம், வ உ சி.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

________________

வலிமைக்கு மார்க்கம்.


களிலும் சுயநயவிவாதங்களிலும் வீணாகச் செலவிடுகின்றனர்; அவர் சரீரத்தால் செய்யும் மிகைகளோ எண்ணிறந்தன.


எல்லாவற்றையும் வெல்லும் வலிமையை நீங்கள் அடைய விரும்புவீர்களாயின், இன்பதுன்பங்களைச் சமமாகக் கொள்ளவும், எப்பொழுதும் அமைதியாயிருக்கவும் கற்றல் வேண்டும், நீங்கள் எந்தக் காரியத்தையும் தனிமையாகச் செய்து முடித்தற்குச் சக்தியுள்ளவர்க ளாகவேண்டும். பல வகை பலமும் அசையாமையோடு கூடியிருக்கின்றது. நிலையான மலையும், பெரிய பாறும், காற்றிற் கிளையாத கருங்காலி மாமும், தனித்து நிற்றலாலும், அசையாது நிற்றலாலும், தமது பலத்தை நமக்குத் தெரிவிக்கின்றன; உருளும் மணலும், வளையும் தளிரும், அசையும் நாணலும் தாக்கும் சக்தியின்மையாலும், அசையுந் தன்மையாலும் தமது பலஹீனத்தை நமக்குத் தெரிவிக்கின்றன; தமது இனங்களை விட்டுப் பிரிக்கப்பட்ட பொழுது, அவை சிறிதும் பிரயோஜனமில்லாமற் போகின்றன. தனது இனத்தாரெல்லாம் மனக்கிளர்ச்சியால் அல்லது மனச்சலனத்தால் துடிக்கும் பொழுது, எவன் அமைதியாகவும் அசையாமலும் இருக்கின்றானோ, அவன் தான் உண்மையில் பலமுள்ள மனிதன்.


எவன் தன்னை அடக்கி ஆளுகின்றானோ, அவன் தான் மற்றவரை அடக்கி யாளுவதற்குத் தகுதியுள்ள


84