பக்கம்:1921-சென்னை மீன் செய்குளங்களின் அறிவிப்பு புஸ்தகம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தை, மெய்ப்புப்பார்க்க தேவையில்லை

________________

13 யிருக்கிறது. அது நல்ல தண்ணீரிலும், கழிகளிலும், சமுத்திரத்தையடுத்த நீரோட்டங்களிலுள்ள, உப்புத் தண்ணீர், கைப்புத் தண்ணீரிலும் வசிக்கும் சக்தியுள்ள தாயிருக்கிறது. அது அடையாற்றிலும், கோட்டை அகழியிலும், செங்கல்பட்டிலிருக்கும் பெரிய கொளவாய் ஏரியிலும், சௌக்கியமாய் வசிக்கிறது. பெண்மீன் கற்கள், கட்டைகளுக்கு அடியில் முட்டையிடுகின்றது. ஆணும் பெண்ணும் குஞ்சுபொரிக்கும் வரையில் முட்டைகளைக்காத்துக்கொண்டிருக்கின்றன. ஆண் மீன் அதிகக்கவலையாய்ப்பார்க்கும். செத்தக்கெண்டை (Etroplus) ஒரு அடி நீளம் வளருகின்றது. அது அனேகமாய் பாசி முதலிய கந்தமூலங்களைத்தின்று ஜீவிப்பதாலும் மற்ற மீன்களை பட்சியாமலிருப்பதாலும், மீன் இலாகாகாரர்கள் அம்மீனை அதற்குமுன் இல்லாத உள் நாட்டிலிருக்கும் நீர்நிலைகளில் கொண்டு போய்விட்டு அதை விருத்தி செய்கிறார்கள். அது உப்புத்தண்ணீரிலும் நல்ல தண்ணீரிலும் முட்டையிட்டு குஞ்சுபொரிக்கும்.

அழகான புள்ளிகளையுடைய சிப்பிலி மீன் சாதாரணமாய் இந்தக்குளத்திலிருக்கிறது. அதற்கு ' 100 கண்' என்ற ஆங்கிலப் பெயர் உண்டானதற்குக் காரணம் அதின் வெண்மையான பக்கங்களில் கண்களைப்போன்ற புள்ளிகள் நிறைந்திருப்பதினால் தான். அதோடுகூட சடக்கன் வகையைச் சேர்ந்த மீன்களும் விடப்பட்டிருக்கின்றன. அம்மீன்களெல்லாம் வௌவால் (Pomfret) என்னும் மீனைப்போல் இரண்டு பக்கமும் சப்பையாகயிருக்கும். அதிலிருக்கும் வே றொருவகைமீன், வலையர்கள், சங்கன் என்று சொல்லும் (Cirrhitichthys aureus) மீன் தான். இது ரோஜாப்பூ நிறமுள்ள சிறு மீன்; அதில் அதிகப் பிரகாசமில்லாத நீட்டுப்போக்கான வரிகளும், அநேக சென்னிறமுள்ள தட்டைப்புள்ளிகளும் இருக்கும். அது முக்காலி யில் உட்காறுவது போல் வாலையும் மார்பு துடுப்பையும் ஊன்றிக் கொண்டு படுத்திருக்கும். இவை இரண்டிற்கு இடையிலிருக்கும் கால் துடுப்பையும் வயிற்றுக்கீழிருக்கும் இரகையும் தேகத்தோடு ஒட்டும்படி மடித்துக்கொள்ளும். அந்த மீன் தண்ணீரின் அடியில், மார்பு துடுப்புகளின் கம்பிகளை இரண்டு கால்களைப்போல் ஊன்றி நகர்ந்துபோகும்.

இந்தக்குளத்திலுள்ள கொஞ்சம் வெண் சிவப்பாயிருக்கும் வேறொரு மீன், சிறிய காடை மீன். அதின் ஒவ்வொரு கன்னத்தில் ஒரு பெரிய வெண்மையான குறியிருக்கும். அது, ஒருவேளை, அனேக காட்டு ஆடுகளுக்குள்ள வெண்மையான புட்டங்களைப் போலவும், காட்டு குழிமுயலுக்கிருக்கும் வெண்மையான சிறிய வாலைப் போலவும், பிந்திப்போன ஒன்று தன் கூட்டத்தைக்கண்டு பிடிக் கும் அடையாளக் குறியாயிருக்கலாம்.

இந்திய கடலிலிருக்கும் கறுப்பு மட்டிவான் என்னும் ஒரு பருத்த வெண்மையான மீனும் அந்தக்குளத்திலிருக்கிறது. நெ. 4, குளம். இதிலும், அல்லது நெ. 3-லும், அப்புக்குட்டி மீன் (Suckerfishes) தினுசுகளும், குறவான் (File or Trigger fishes) தினுசுகளும் இருக்கின்றன. இவற்றில் முந்தியதற்கு ரிமோரா என்று பெயர். அவற்றில் " கப்பல்ஒட்டி மீன் என்றும் மிகவும் சாதாரணமான