பக்கம்:1921-சென்னை மீன் செய்குளங்களின் அறிவிப்பு புஸ்தகம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

(Pleuronectidae) என்னும், உண்மையான, ல தட்டை மீன்கள் (Flat-fishes) அதிகச்சப்பையாயுள்ளது. அவைகள் இங்கே, கடை களில் அதிகமாய் அகப்படாவிட்டாலும், சாதாரணமாய் இவ்விடத் தில் உண்டு. அவைகளுக்கு இங்கே, நாக்கு மீன் (Indian sole), எரு மை நாக்கு (Indian turbot) என்று பேர்வழங்குகிறது. இந்த மீன் களெல்லாம் அதிக சப்பையாய் இருப்பதால் வழக்கமாய் ஒருபக்க மாய்ப் படுத்துக்கொள்ளுகின் றன. அந்தப்பக்கத்திற்கு "குருட் டுபக்க" மென்று பெயர். அந்தப்பக்கத்தில் ஒரு கண் இல்லாம லிருப்பதுமன் றி, சாதாரண வெண்மையாய் அல்லது, வர்ணமில் லாமலிருக்கும் ஆனால் மேல்பக்கமோ கடல் அடித்தரைக்கு ஒத்து இருப்பதற்கு ஏற்றபடி, புள்ளிபுள்ளியாயும், சலவைக்கல் வர்ணமா யும் இருக்கிறது. ஆனால், கீழ்பக்கத்தில் எப்பொழுதும் கண் இல் லாமல் இல்லை. தட்டைமீன் குஞ்சுகள், முட்டையிலிருந்து வெளியா னவுடன், மற்ற மீன்களைப்போலவே தேகம் உருண்டையாயும் அல் லது ஒரு குழாவைப்போலவும் இருக்கிறது. இருபக்கமும் ஒரேமாதி ரியாயிருக்கிறது. தலைக்கு இருபுரமும், ஒவ்வொரு கண் இருக்கிறது. கொஞ்சகாலம். இந்த மீன்குஞ்சுகள் கடலில் தாராளமாய் நீந்தித் திரிகின்றன. ஆனால் கொஞ்சம் வயதானவுடன் அது கரையைநோக் கிச்சென் று, ஆழமில்லாத இடத்திற்குப் போனவுடன், கடல் அடி- மட்டத்திற்குப்போய் ஒரு பக்கமாய்படுத்துக்கொள்ளுகிறது.சில வேளை வலதுபக்கமாயும், சிலவேளை இடதுபக்கமாயும் படுக்கிறது. அடி பக்கம் இருக்கும் மணலில் மோதுகிற கண், பிரயோசனமற் றுப்போய் அதின் கண்ணொளியை இழந்துவிடுமென்பது சொல்லாம லே விளங்கும். ஆகவே கொஞ்சம் கொஞ்சமாய், இன்னும் இளம் பதமாயிருக்கும் கீழ்ப்பக்கமுள்ள கண்ணெலும்புகள், மேற்பக்கமாய் ச்சுழன்று கண்மணியையும் மேல்பார்வைக்குக்கொண்டுவந்துவிடுகிற து. இவ்விதமாய், இதைப்போலவே தட்டையாயிருக்கும், திருக் கைமீனுக்கு இவ்வாறு உ உண்டாவதில்லை. ஏனென்றால், அது முது கும் வயிரும் நெருங்கும்படி தட்டையாயிருக்கிறது. தேகத்தின் இரண்டுபக்கமும், சிரகுபோல் விரிந்து பரவியிருக்கிறது. ஆனால் சப்பை மீனோ, பக்கமும் பக்கமும் நெருங்கும்படி சப்பையாயிருக் கிறது. ஆகையால், கடல் அடியில், ஒருபக்கமாய்ப்படுத்திருக்கும் பொழுது, இரண்டிலொருபக்கமாய்தான் படுத்திருக்கவேண்டும். எந்தப்பக்கம் கீழிருக்கவேண்டுமென்பது அவசியமாகக்காணவில்லை. அது எந்தப்பக்கமாயிருந்தாலும், அப்பக்கத்திலுள்ள நிறம்போய் விடுகிறது; மேல்பக்கமோ, மீனிருப்பது தெரியா தவிதம் செய்வதற் கேற்ற நிறத்தைப்பெறுகிறது. மடவைக்கெண்டை (Mullets), மனிதனுக்கு அதிக உபயோக முள்ள ள மிகவும் அழகான மீன். அவைகள் சமுத்திரக்கரையோர மாயுள்ள நீரோடைகளிலும், கழிகளிலும் விசேஷமாய் கிடை க்கும். அநேகமாய் அவைகள் கந்தமூலங்களையே தின்கின்றன. கடலுள்ள சிறுஇலை பாசிகளைத்தின்கின்றன. மற்ற மீன்கள் பசியினால் சாகக்கூடிய இடத்தில், அவைகள், வசித்து விர்த்தியா கின்றன. ஆகையால், கழிமுகங்களிலுள்ள மீன்குட்டைகளில் மீனில்லாமலிருப்பதை, நிவர்த்திசெய்வதற்கு ஏதுவாயிருக்கிறது.