பக்கம்:1921-சென்னை மீன் செய்குளங்களின் அறிவிப்பு புஸ்தகம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

25 இதின் வாலையும், சிறகுகளையும், துண்டு துண்டாய்க்கடிக்கும் துர்வழக்கமுடையன. அதினுடனிருக்கும் மற்ற மீன்களைப்போல, இதுவும் சந்தோஷமாய் வசிக்கின்றது. ஆனால், அதைப்பார்த்தால், பல வீனமும் செயலற்றதாயும் இருப்பதாய்த்தோன்றும். மீன் உறுப்புகளின் அமைப்பு எவ்வளவுதூரம் அவைகளின் வாழ்விற்கு உசிதமாகயிருக்கிறதென்று காண்பின், அவைகள் க்ஷேமத்திற்கு முழுவதும் அனுகூலமாயிராமல் வியர்த்தமாகவே இருக்கிறதற்கு இதுவே ஓர் உதாரணம்.


      இந்தக்குளத்தில் அநேக அழகும் உபயோகமுமுள்ள சாப்பிடத் தக்க மீன்கள் பலவகையிருக்கின்றன. இதற்குச்சென்னையில் புள் ளித்திரட்டை என்றும் மன்னார்வளைகுடாவில் பேய்ந்தை என்றும் பெயர். இது எப்பொழுதும் கூட்டமாகவே நடமாடுகிறபடியாலும், சமுத்திரத்தின் அடியில் வசிப்பதாலும், கடல் வாழும் ஜந்துக்களை ஏராளமாய்ப்பிடிக்கத்தக்கதான, நீராவியந்திர வலை உபயோகப்படுத்தும்போது இம்மீன்கள் அதிகமாய் பிடிபடவேண்டும். கரைமீன் படவர், தங்களிடத்தில் தற்போதுள்ள பிரயோஜனமற்ற வலைகளினால், ஒன்றும் செய்ய முடியவில்லை.

நெ.9,குளம் இந்தக்குளத்தில் வௌவால் (Pomfrets) மடவை (Grey mul- lets) கெளித்தி (Cat-fishes), நாக்கு மீன்கள் (Soles) முதலிய சப்பை மீன்களும் (Flat-fishes) இருக்கின்றன. வைப்பதற்கு வேறு இடமில்லாத பலவிதமான கலவான் (Seaperches) களையும் இங்கே பார்க்கலாம். வௌவால் (Pomfrets) என்னும் மீனைச் சென்னையைவிட பம்பாய் பக்கத்தில் நன்றாய்த்தெரியும். இங்குள்ள கடலில் அது மூன்று தினுசாயிருக்கின்றன. வெள்ளை வௌவால் (White pomfret), வெள்ளி வௌவால் (Silver pomfret)- இது நல்ல விளைந்த பருவமா ருயிக்கும்பொழுதுநிறமாறியிருப்பதால் அப்பொழுது இதற்கு (Grey pomfret) என்று பெயர்-கறுப்பு வெளவால் (Black pomfret) என்பவையாம். இவைகள் எல்லாம் மிகவும் அதிகமாய் மதிக்கப்படும், சாப்பாட்டுக்குதவும் இந்திய மீன்கள். நாம் ஆங்கிலேய தேசத்தில் உபயோகப்படுத்தும் சப்பைமீன்களைப்போல் இங்கே இந்த மீன்களை ச்சாப்பிடுகிறோம். ஆனால், ஆங்கிலேய மீன்களைப்போலல்லாமல் இந்த மீன்கள், கோணாமல் நிமிர்ந்து நீந்துகின்றன. இருந்தாலும், பக்கத்திற்குப்பக்கம், அதிகமாய்ச்சப்பையாயிருப்பதாலும், முதுகிதகும் வயிற்றிற்கும் இடையில் அதிக அகலமாயிருப்பதாலும், அறை சமையல் செய்து பார்த்தால், பிளேய்ஸ் (Plaice) என்னும் சப்பை மீனைப்போல்தான் தோன்றுகிறது. இங்கே சாதாரணமாய் அகப்படக்கூடியதாயிருந்தாலும், பம்பாய்கரையோரமாய் இருக்கும் அவ்வளவு பெருங்கூட்டமாயிருப்பதில்லை. பம்பாயில், கத்தாளைமீன் (Jew fishes) பம்பாய் வாத்துகள் (Bombay-ducks), முதலிய மீன்களோடு இதுவும்சேர்ந்து, சாப்பாட்டிற்குதவும் மூன்று அதிக சிலாக்கியமான மீன்களிலொன்றாகிறது. அதிக ஜாஸ்தியாய் தட்டையாயிருக்கும் மீன்களில் மீன் ஆராய்ச்சி நூலில்சொல்லிய பிலுரோநெக்டிடே 4