பக்கம்:1921-சென்னை மீன் செய்குளங்களின் அறிவிப்பு புஸ்தகம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

25 24 போலிருப்பதால், இதை கடல் முட்பன்றி என்று சொல்லலாம். இதுவுமல்லாமல், அதின் சதை விஷமுடையதென்று எண்ணுகிறார் கள். இப்பக்கத்திலுள்ள மீன்களில் இது ஒன்றுதான் உணவுக்கா காத மாமிசமுடையது. சிலவேளைகளில் கால நிலமையின் மாறு தலுக்கேற்றபடி, வேறு சில மீன்களுக்கும் விஷத்தன்மையான சதை உண்டாகலாம். கரைவலையில் சிலசமயங்களில், இந்த பிலாச்சைகள் அதிகமாய் அகப்படுவதுண்டு. கடலிலிருந்து எடுக்கப்படும்பொழுது அவை உப்பிக்கொள்ளுகின்றன. இப்பொழுது அவைகள் காற்றினால் உப்பியிருக்கிறபடியால் அவைகளை மறுபடியும் கடலில் போட்டால், வயிறு மேலேயும் முதுகு கீழாயும், ஆதரவற்று மிதக்கின்றன. இந்த உயிருள்ள கால்பந்தைப்போன்றது, கடற்கரையோரத்தில், சிறு பிள்ளைகள் கண்ணில் அகப்பட்டால் அவர்களுக்கு அதிக சந்தோஷ த்திற்கிடமாகிறது. ஜப்பான் தேசத்தில், இத்தோலினுள் நெல் உமியைத் திணித்துக்காயவைத்து, பின்பு, உமியை யெடுத்தபின், அதினுள் ஒரு மெழுக்குவத்தியை வெகு தந்திரமாய் எரியவிட்டு, சீனா லாந்தரைப்போல் உபயோகப்படுத்துகிறார்கள். மீனாராய்ச்சி நூல்படி அதற்கு டெட்ரோடன் (Tetrodon) என் று பெயர். அதற்கு கிளிப்பிள்ளையைப்போல் தாழ்வாயும், நறுக் கும் இரண்டு பெரிய பற்களும், நன்றாய்க்காயமுண்டாக்கத்தக்கதாய் கூரிய முனையையுடையதாயும் இருத்தலால் அதற்கு அப்பெயர் கொடுக்கப்பட்டது. இளமையான முத்துசிப்பிகளை தின்று அழிக் கும் மீன்முதலிய அநேகம் விரோதிகளில் பிலாச்சையும் ஒன்று. அவைகளுக்குள்ளே ஓயா ச்சண்டையுண்டு. சென்னையில் இவ்வகையில் சாதாரணமாயுள்ளது, கரும்பிலாச்சை என்னும் மீன் தான். அது, கோபமாயிருக்கும்பொழுதும், பசியாயிருக்கும்பொ ழுதும், சண்டை நோக்கமாகவேயிருக்கும். அவைகள் பலவீனமுள் ள அல்லது வியாதியாயுள்ள மீனைத்தாக்கும் தன்மையுள்ளவை. அம்மீனைச்சூழ்ந்துக்கொண்டு, ஒன்று வாலைப்பிடித்துக்கொள்ளும்; மற்றவைகள் அதின் இறகுகளை கிழிக்கும்; மிச்சமாய் உள்ளவை கள், தங்களுக்கு பிடி அகப்படுகிற இடத்தில், தங்களுடைய கிளி மூக்குப்போன்ற பெரிய பற்களினால் துண்டுதுண்டாகக்கடிக்கும். பிலாச்சைகளை ஒன்றாய் வைத்திருந்தால், அவைகள் மேலெல்லாம் கிழிபட்டும், அவையவங்கள் குறைக்கப்பட்டுள்ள கூட்டமாய்த்தோ ன்றும். அவைகளில் ஒன்றுக்காவது வால் முழுசாயிராது. மற்ற இறகுகளும் கடிக்கப்பட்டு, மொட்டையாயிருக்கும். க இதற்கு அதிக சம்பந்தமுள்ளது "பணப்பெட்டி" மீன் (Coffer fish). அதற்கு, தலையின் உச்சியிலிருந்து, கொம்புபோல் இர ண்டு வளர்ந்து இருப்பதால் அதற்குத் தமிழில் மாடுமீன் என்று பெயர். அதின் தேகம், வால், சிறகுகள், கண்கள் வெளித்தோன் றும்படி மூன்று துவாரங்களுள்ள, ஓர் எலும்புப் பெட்டியைப் போன்றது, அது பெரிதாகிறதில்லை. ஒரே ஒரு மீன் மட்டுமிருந் தால் அதை பாதுகாப்பதற்காக மேசைமேல் இருக்கும் ஒருசிறு செய்குளத்தில் வைக்கப்பட்டிருக்கும். அந்த எளிய சிறுமீனுக்குத் த ன்னை காத்துக்கொள்ளும் சக்தியில்லாததினால், மற்ற மீன்கள்,