பக்கம்:1921-சென்னை மீன் செய்குளங்களின் அறிவிப்பு புஸ்தகம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

23 குகள் அதிக நீட்டமாய் இருப்பதால் அதின் உருவம் பிறையைப் போல் வளைந்திருக்கும். இதைப்பார்க்க, ஒரு தெய்வீகமான ஒரு கறுப்புப்பிறை இச்சிறுகுளத்தில் மெதுவாகவும் கம்பீரமாகவும் சுற்றி வருதல்போல் தோன்றும். இலங்கைத்தீவில், தென்மேற்குக் கரை யில் மலைப்பாங்கான கரையோரமாயுள்ள சிறுகுட்டைகளில் இருக் கும் இம்மீன்களில் ஒரு தினுசு, இளமையாயிருக்கும் நிலைமையில், உருவத்திலும் நிறத்திலும், ஒரு காய்ந்து உ உதிர்ந்த இலைபோல் இருப்பதைக் கண்டிருக்கிறார்கள். அது ஒரே தடவையில் பல நிமி ஷங்கள் ஒரு புரமாய் ஒருக்கணித்துப்படுப்பதால் இலையைப்போன்ற தோற்றம் அதிகப்படுகிறது. காண இதில் 32-ம் பக்கத்தி விவரித்திருக்கும் மஞ்சள் நிறமான தொப்பை மீனின் இரண்டு வகைகள் இந்த குளத்தில் லாம். இவைகளுக்குத்தீனிபோடுவது வேலைக்காரனுக்கு மிகக்கஷ் டத்தைக்கொடுக்கிறது. அவைகள் தங்களுடைய ஆகாரம் தானாக வே வாயில் வந்து விழும்படி எதிர்பார்க்கும் சுபாவமுள்ளவைகளா த லால், தீனிபோடும் சமயம் வாய்த்தபொழுது, அக்குளத்திலுள்ள சுறுசுறுப்பாயுள்ள மற்ற மீன்கள், அவைகளுக்கு ஆகாரம் கிடைப்ப தற்கு இடங்கொடாமல் தின்றுவிடுகின்றன. வேலைக்காரன் இந்தச் சங்கடமுண்டாகாதபடி, ஒரு நீண்ட கம்பி முனையில், தீனியைக் கோர்த்து, அம்மீனின் முகத்திற்கெதிரே, அக்கம்பியை அசைத்துக் காட்டிக்கொண்டிருக்கிறான். இப்படிச்செய்வது எப்பொழுதும் பலிக் கிறதில்லை. இந்த மீன் தன் மனதைத்திடப்படுத்தி இரையை தின் பதற்கு அதிக காலதாமதமாகிறபடியால், அடிக்கடி, தும்பி மீன் அவ்விரையை கௌவித்தின்றுவிடுகிறது. மறுபடியும் அவ்வாறே செய்யவேண்டியதாயிருக்கிறது. இது வேலைக்காரனுக்கு அதிக கஷ் டத்தையுண்டுபண்ணுகிறது. அனேக தடவைகளில் அம்மீனுக்கு இரையில்லாமற்போகிறது. ட நெ 8, குளம். இந்தக்குளத்தில் இருக்கும் பலவகை மீன்களில் அதிகமாய்க் கவனிக்கத்தக்கது, பிலாச்சையென்று அழைக்கப்படும் கோள மீன் (Globe-ishes) அல்லது, உப்பும் மீன் (Puffer-fishes) என்பதே. அதற்குள்ள ஒரு முக்கிய குணம் என்னவென்றால், அதற்குப்பயம் தோற்றியபொழுது நீரையாவது, காற்றையாவது, உட்கொண்டு கோளமாக உப்பிக்கொள்ளும் தன்மையுள்ளது, துலக்கமான நிற முடையவை அவற்றிற்சிலவே. இவைகளில் புள்ளிப்பிலாச்சை என்று ஒரு மீன் இருக்கிறது. அது உப்பும்பொழுது, தொண்டை யிலும் பக்கங்களிலும், மஞ்சளும் பச்சை நிறமும் கலந்து பரவியிருப் பது மிக அழகாய் தோன்றும். இந்த மீன்களின் தொண்டையின் முற்பக்கம் ஒரு கோணிப்பையைப்போல் அதிகமாய் பெருத்திருக் கிறது. அது தோலுக்கும் குடலுக்கும் இடையில் பின்னோக்கிச் செல்லுகிறது. இதற்குள், காற்றாவது, நீராவது, உட்கொண்டவுடன் அது ஒரு புகைக்கூண்டுபோல் உப்பி, தேகத்தின் குறுக்களவை இரட்டிப்பாக்குகிறது. உடனே அதின் தோலில் படிந்திருக்கும் முட்கள், செங்குத்தாய் தூக்கிக்கொண்டு, அதின் கோரமான தோற் றத்தை அதிகரிக்கச்செய்கிறது. இது நிலத்திலுள்ள முட்பன் றியைப்